யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது..பறந்து பறந்து பந்தாடிய பொன்னம்பலம்! இப்போ வீல்சேரில் முடங்கிட்டாரு
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை திரையில் பார்த்தாலே மிரள வைத்த வில்லன் நடிகர் பொன்னம்பலம். உயரமான உடல் அமைப்பு, கரகரப்பான குரல், கடுமையான பார்வை, பறந்து பறந்து சண்டை போடும் ஸ்டைல் என வில்லன் என்றால் பொன்னம்பலம் தான் என்ற அளவுக்கு அவர் சினிமாவில் தனி அடையாளம் பெற்றவர். ஆனால் இன்று, அதே பொன்னம்பலம் நடக்கக்கூட முடியாமல் வீல் சேரில் அமர்ந்திருக்கும் நிலை ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பொன்னம்பலம் தனது வாழ்க்கையை ஸ்டண்ட் கலைஞராகத் தொடங்கினார். பல திரைப்படங்களில் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்தபடி, சினிமாவில் மெதுவாக தனது இடத்தை பிடித்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்த அவர், "நாட்டாமை" திரைப்படம் மூலம் ஒரே படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
அந்த படத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடித்த பொன்னம்பலம், தனது பெயரிலேயே கதாபாத்திரம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. "தாய்க்கிழவி நீளமா பேசாத... மூச்சு வாங்கும்" என்ற அவரது வசனம் 90-களில் சினிமா ரசிகர்களின் காதில் இன்று வரை ஒலிக்கிறது.

நடிகர் பொன்னம்பலம்
அந்த ஒரு வசனமே அவரை தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடிக்கச் செய்தது. அதன் பிறகு கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார். சில படங்களில் கௌரவ வேடங்களிலும் அவர் தோன்றினார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள பொன்னம்பலம், தென்னிந்திய சினிமாவில் பரவலாக அறியப்பட்ட முகமாக இருந்தார்.
சிறுநீரக கோளாறு
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதன் பின்னணியில், விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் பேசிய வாழ்க்கை அனுபவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், திடீரென அவருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டயாலிசிஸ் சிகிச்சை
தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கலும் அவரை வாட்டியது. மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் போதாத சூழலில், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து உதவி கோரினார். அந்த நேரத்தில் பல திரையுலக பிரபலங்கள் உதவிக்கு முன்வந்தனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி நேரடியாக உதவினார். அதேபோல் கமல் ஹாசன், சரத்குமார், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதன் பிறகு சிகிச்சை முடிந்து பொன்னம்பலம் வீடு திரும்பினார்.
ரசிகர்கள் சோகம்
ஆனால் நோய் முழுமையாக குணமாகவில்லை. தற்போது அவர் வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் வரை டயாலிசிஸ் செய்து வருகிறார். ஒரு காலத்தில் திரையில் பறந்து சண்டை போட்ட நடிகர், இன்று நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரது வீட்டின் அருகே நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வில், வீல் சேரில் அமர்ந்தபடியே கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் அவர் வீல் சேரில் இருந்தபடியே ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications