சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”எட்டப்பன்... இனத்துரோகி...” பழ.நெடுமாறனை விமர்சித்து 2008-லேயே காட்டமாக கவிதை எழுதிய கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பழ.நெடுமாறன் புகழ்ந்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2008 ஆம் ஆண்டு எழுதிய கவிதை ஒன்று தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக சென்னை தியாகராயர் நகரில் நேற்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

இதில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலையால் தலைவர்கள் புறக்கணிப்பு

அண்ணாமலையால் தலைவர்கள் புறக்கணிப்பு

இந்த விழாவில் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் நினைவேந்தல் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். நினைவேந்தல் கூட்ட அழைப்பிதலில் இடம்பெற்றிருந்த பலர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை பிரச்சனை

இலங்கை பிரச்சனை


இதில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், "சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அதே சிங்கள மக்கள் ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் ராஜபக்சே சகோதரர்கள் ஓடி ஒளிந்து கொள்கிற நிலைமைதான் உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை விவகாரம் சர்வதேச பிரச்சனையாகக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

 மோடி, அண்ணாமலைக்கு பாராட்டு

மோடி, அண்ணாமலைக்கு பாராட்டு

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்கிறது. இது இந்தியாவுக்கு பேராபத்தான ஒன்று. இலங்கை பிரச்சனையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி ஆழமாக புரிந்து கொண்டு பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அதேபோல் செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர்." என்றார்.

கருணாநிதியின் கவிதை

கருணாநிதியின் கவிதை


பழ.நெடுமாறனின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே பழ.நெடுமாறனை காட்டமாக விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய காட்டமான கவிதை ஒன்றும் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அந்த கவிதை பின்வருமாறு,

"விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

 ஏன் இந்த கவிதை?

ஏன் இந்த கவிதை?

2008 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, பழ.நெடுமாறன் எழுதிய ஒரு கட்டுரையில், "காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார்." என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த கவிதையை கருணாநிதி எழுதியது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Tamilnadu CM Karunanithi wrote harsh poem against Pazha.Nedumaran in 2008:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X