ரஜினி ஸ்டைல்.. இமயமலைக்கு சென்ற அண்ணாமலை.. பதவி போன நிலையில் அடுத்த பிளான் என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட நிலையில், நேற்று திடீரென டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லி சென்ற அவர் உத்தரகாண்ட் சென்றதாக தகவல் வெளியானது. கேதர்நாத் உள்பட ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தியதாகவும், இமயமலை பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட நிலையில் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அண்ணாமலையின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார்.

இமயமலை சென்றார் அண்ணாமலை
அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்று அதிமுக நிர்பந்தித்ததாகவும் அதன் காரணமாகவே அவரை அப்பொறுப்பில் இருந்து பாஜக தலைமை மாற்றியதாகவும் சொல்லப்பட்டது. பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேறுக்கொண்ட நிலையில், அண்ணாமலை நேற்று காலை விமானம் மூலம் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் தேசிய தலைமையை அவர் சந்திக்க இருப்பதாக பரபரப்பு கிளம்பியது. ஆனால், அண்ணாமலை டெல்லியில் தேசிய தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை எனவும் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் புறப்பட்டு சென்று இருப்பதாகவும் சொல்லப்பட்டது. உத்தரகாண்டில் கேதர்நாத் உள்பட ஆன்மிக தலங்களுக்கு அண்ணாமலை சென்று வழிபாடு நடத்த இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இமயமலை பாபா கோவிலிலும் அண்ணாமலை வழிபாடு நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இமயமலையில் உள்ள பாபா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். கோயிலில் வழிபாடு செய்த பிறகு பாபா முத்திரையை காண்பித்தவாறு அண்ணாமலை எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் பரபரப்புக்கு இடையே அண்ணாமலையின் இந்த திடீர் இமயமலை பயணம் கவனம் பெற்றுள்ளது.
தேசிய அளவில் பொறுப்பு
தமிழக பாஜக தலைவர் இருந்து மாற்றப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புடன் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. எனினும் தமிழகம் முழுக்க அரசியல் சுற்றுப் பயணம் செய்ய போகும் ரீதியில்தான் அண்ணாமலை பேச்சு உள்ளது.
தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை,
எனக்கு இவ்வளவு நாட்களாக ஒரு பொறுப்பு என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இனி என்னால் அண்ணாமலையாக பேச முடியும். பொதுவாக ஒரு அரசியல்வாதிக்கு அடித்து ஆடும் 'பாக்சிங்' கலை தேவை. அதனால், என்னுடைய பேச்சு 'ஸ்டைலை' மாற்றிக்கொள்ள போகிறேன். இனி, பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இருக்கிறார்.
சிக்சர் அடிப்பதே வேலை
இனிமேல் வரும் கடினமான பந்துகளுக்கு, அவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்த்துக் கொள்வார். எனக்கான பந்தை இனி 'சிக்ஸ்' அடிப்பதுதான் என்னுடைய வேலை" என்று கூறியிருந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இதனால், வரும் சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலை தமிழக அரசியலில் தீவிரமாக பயணிப்பாரா.. அல்லது தேசிய அரசியலுக்கு செல்வாரா என்ற பேச்சும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம், நடைபயணம் ஆகியவற்றில் அண்ணாமலை ஈடுபட்டு பாஜக கூட்டணிக்காக பிரசாரம் செய்யலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே தற்போதைய அண்ணாமலையின் பயணம் அரசியல் பயணமா? இல்லை ஆன்மீக பயணமா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
ரஜினி ஸ்டைலில் அண்ணாமலை?
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது வழக்கம். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். தற்போது ரஜினிகாந்த் ஸ்டைலில் அண்ணாமலையும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்று இருப்பதாக நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications