Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. ஆகஸ்டு 31-ல் நடைபெறும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆகஸ்டு 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னை டி நகரில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் புயலால் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த போட்டி நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் அமைப்புடன் 3 ஆண்டுகளுக்கு சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டி நகர் சாலைகளில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலின் காரணமாக அந்த போட்டியை நடத்த முடியாமல் போனது.

Chennai Formula 4 Car Race Udayanidhi Stalin 4

3 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் மழை தொடங்குவதற்கு முன்பாகவே வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி பார்முலா 4 பந்தயம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மையப்பகுதியான அண்ணா சாலையில் இரவு நேரத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் இருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டு தீவுத்திடல் வந்து சேரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையை கடக்கும் போது மட்டும் ஒலி கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும். இதற்கு மருத்துவமனை சார்பிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடை இல்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

பார்முலா 4 கார் பந்தயமானது ஆகஸ்டு 24 ஆம் தேதியே தொடங்குகிறது. இருங்காட்டுக்கோட்டையில் இந்த கார் பந்தயம் நடைபெறும். 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை அண்ணா சலையில் நடைபெறும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பிறகு தான் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

6 அணியில் மொத்தம் 12 வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு நிதியின் மூலம் இந்த போட்டியை நடத்த கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதால், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனத்துடன் தான் இந்த பார்முலா 4 கார் பந்தயமானது நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+