ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்.. ஆனா ஒரு கண்டிஷன்
சென்னை: சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனை பார்க்க செல்லும் மக்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். ஆனால் அவர்கள் கண்டிப்பாக Paytm Insider-ல் முன்பதிவு செய்து பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது இல்லாவிட்டால் இலவச பயணம் என்பது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியா மற்றும் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை 2 நாட்கள் நைடெபற உள்ளது.

இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்த உள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த போட்டி என்பது சென்னை தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை நடக்கும். கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள இடங்களை இணைத்து 3.5 கிலோமீட்டர் சர்க்யூட்டில் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் சென்னை இரவு நேர ஃபார்மலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை காண செல்வோர் மெட்ரோவில் இலவசமாக செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலவச பயணத்துக்கு ஒரு முக்கிய கண்டிஷன் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்ட மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றுமு் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31 (நாளை) மற்றும் செப்டம்பர் 1 (நாளை மறுநாள்) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் டன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ அல்லது பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
‛Paytm Insider' மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸ் பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தக்கு சென்று திரும்ப முடியும்.
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். Paytm Insider மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்த சலுகைக்கு வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications