ஃபார்முலா 4 ரேஸுக்கு தயாராகும் பளபள கார்கள்.. இந்த ரூட்டில் தான் சம்பவமே! சென்னைவாசிகளே மிக கவனம்!
சென்னை: பார்முலா 4 கார் பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஸுக்கு கார்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரேஸ் நடக்கும் ட்ராக்கின் ரூட் மேப் என்ன? ரேஸின் போது போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் அண்ணா சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்தொடல் வரை இந்த பந்தயம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து கார்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ரேஸ் கார்கள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன. தனியார் இடங்களிலும், அரசு அமைத்துள்ள பகுதிகளிலும் கார்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பந்தயத்துக்காக கார்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள சர்க்யூட்டில் இந்த கார் பந்தயமானது நடைபெறுகிறது.
கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் தான் இந்த பந்தயமானது நடக்க இருக்கிறது. இந்த சர்க்யூட் தான் தெற்காசியாவிலேயே நீளமான சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் ரேஸை பொதுமக்களும் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அனுமதி சீட்டும் விற்கப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கலைவாணர் அரங்கம், சென்னை யூனிவர்சிட்டி, பீச் ஆகிய பகுதிகளில் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு மேலும் பல வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் ,செல்லப்பிராணிகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், விளம்பர பொருட்கள் , புகை பிடிக்கும் பொருள்கள், ஆடியோ ரெக்கார்டிங் சாதனங்கள், தண்ணீர் பாட்டில், முட்டை போன்றவை, ஜாதி மத உணர்வுகளை புண்படுத்தும் பதாகைகள் விளம்பரங்கள், ஸ்ப்ரே பெயிண்ட் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கு, காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
அதே நேரத்தில் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications