திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி… வைகோ நம்பிக்கை
Recommended Video

சென்னை: திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இவ்வாறு கூறினார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறும்.
இதற்காக 40 தொகுதிகளிலும் நானும், கழக கண்மணிகளும் அர்ப்பணிப்போடு பாடுபடுவோம் என தெரிவித்தார்.

திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வைகோ அதிருப்தியில் உள்ளார் என்றும் திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications