சுக்கு நூறாகுதே கூட்டணி கோட்டை! குறுக்கே வந்த விஜய்.. கெத்தாக வரும் சீமான்! கத்தி மேல் திமுக-அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயிலை விட தமிழக அரசியல் களம் சூடாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு முழுமையாக இருக்கும் நிலையில் தற்போதைய கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன. தற்போதைய சூழலில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என கூறப்படும் நிலையில், நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தால் திமுக அதிமுகவுக்குமே சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பது குறித்து சற்று விரிவாக ஆராயலாம்.

கூட்டணி உடைந்து 600 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணிக்கு பின்னால் பல்வேறு நெருக்கடிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி அதனை மறுத்துள்ளார்.

அதே நேரத்தில் அவர் வைத்த டிமாண்டுகளுக்கு பாஜக தலைமை தலை அசைத்ததின் விளைவு தமிழக பாஜக தலைவர் மற்றும் எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டது என கூறுகின்றனர் அதிமுகவினர். இது ஒரு புறம் இருக்க சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. அதிமுக கூட்டணியும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது. அதே நேரத்தில் கூட்டணி ஆட்சிக்கு தயார் என கூறியிருந்த விஜய் தனித்துவிடப்பட்டிருக்கிறார். நாம் தமிழர் சீமானோ எப்போதும் போல் தனித்து களமிறங்குவது உறுதி என சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் 2026 தேர்தலில் விஜய் முன் பெரும் சவால்கள் காத்திருக்கிறது.

actor vijay tvk politics

தமிழக அரசியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கலாம். தற்போது அதிமுகவுடன் தேமுதிக, பாஜகவுடன் பாமகவும் கூட்டணியில் இருக்கிறது. எனவே மீண்டும் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்த கூட்டணி உருவாக்கலாம். நாம் தமிழர் கட்சி சீமான் தனியாகத்தான் தேர்தலை சந்திப்பார். இதனால் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் விஜய்க்கு உருவாகி இருக்கிறது.

விஜய் கட்சி

கடந்த சில நாட்களாகவே அதிமுகவுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், என்பது தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என விஜய் கூறியதால் அதிமுக கூட்டணியில் அவர் இணைவது சாத்தியமே இல்லை. அதே நேரத்தில் புதுவரவான விஜயை நம்பி திமுக அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வருமா என்பது கேள்விக்குறி தான். இதனால் 2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்கும் என்கிறார் சீமான்.

அதிமுக - திமுக கூட்டணி

அதிமுக திமுக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் நிலையில் நாம் தமிழர் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் அது யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்பது குறித்து பார்க்கலாம். 2016 தேர்தலை பொருத்தவரை அதிமுக 136 இடங்களிலும், திமுக 98 தொகுதிகளிலும் வென்றது. சுமார் 41% வாக்குகளுடன் அதிமுக ஆட்சியை பெற்றது. ஏறக்குறைய ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியை இழந்தது. ஆனால் அப்போதைய தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு ஆறு சதவீதமாகவும், தனித்துப் போட்டியிட்ட பாமகவின் வாக்கு சுமார் 5.5 சதவீதமாக இருந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வேறு ஒரு சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது அணி

ஒருவேளை மக்கள் நல கூட்டணியில் இருந்த கட்சிகள் நாம் தமிழர் இல்லாமல் இருந்திருந்தால் திமுக தான் வெற்றி பெற்றிருக்கும். தொடர்ந்து 2021 தேர்தலில் திமுக 45 சதவீத வாக்குகளுடன் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி வாக்கு சதவீதம் வெறும் 40 என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஐந்து சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்த நிலையில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றிருந்ததை கவனிக்க வேண்டும். தேமுதிக கூட்டணி கிட்டத்தட்ட மூன்று சதவீத வாக்குகளையும், மக்கள் நீதி மையம் 2.7 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

நாம் தமிழர் கட்சி

ஒருவேளை நாம் தமிழர் வாக்குகள் அதிமுகவுக்கு சென்றிருந்தால் நிச்சயம் அந்த கட்சி கூட்டணி அமைத்திருக்கலாம் என கணிக்கின்றனர் தேர்தல் நிபுணர்கள். இந்த நிலையில் 2021 தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி தற்போது மாறி இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சேரலாம். இதனால் அந்த கட்சிக்கு கூடுதல் வாக்கு வங்கி கிடைக்கும். அதே நேரத்தில் மக்கள் நீதி மையம் திமுக கூட்டணியில் இணைந்திருப்பதால் அந்தக் கட்சி கிட்டத்தட்ட 48 சதவீத வாக்குகள் கிடைக்கலாம்.

விஜய் அரசியல்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் நாம் தமிழர் கட்சியின் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டுயிட்டால் அதிமுக திமுக ஆகிய கட்சிகளுக்கு சிக்கல் தான். தற்போதைய சூழலில் திமுகவுக்கு 47% வாக்குகள் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணியை சேர்த்தால் 42 சதவீத வாக்குகள் வரும். நாம் தமிழர் கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குகள் திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என வைத்துக் கொள்ளலாம்.

தமிழக வெற்றிக் கழகம்

ஆனால் புதிதாக வரும் தமிழக வெற்றி கழகம் தான் யாருடைய வாக்குகளை பிரிக்கும் என தெரியவில்லை. திமுகவை கடுமையாக எதிர்ப்பதால் அதிமுக ஆதரவு வாக்குகள் விஜய்க்கு செல்லலாம். பாஜகவையும் விஜய் கடுமையாக எதிர்க்கும் நிலையில், பாஜக எதிர்ப்பு வாக்குகள், இஸ்லாமிய வாக்குகள், அரசு ஊழியர்கள் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் விஜய்க்கு வாக்களிக்கலாம். இது திமுக அதிமுக என இரு கட்சிகளுக்குமே சவால்தான்.

2026 தேர்தல்

2006 தேர்தலில் விஜயகாந்த் தனித்து களமிறங்கி ஆளுங்கட்சியான அதிமுகவை ஆட்சியை இழக்க வைத்தது, 2011ல் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி வைத்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியது 2016ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்காமல் இருக்க மக்கள் நல கூட்டணி முக்கிய காரணம் என்பதை கவனிக்க வேண்டும். 2021ல் நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகள் தான் அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக இருக்க காரணம். எனவே தமிழகத்தில் எப்போது நான்காவது அணி உருவாகிறதோ அப்போதெல்லாம் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சிக்கல் தான். இந்த முறை அதிமுக நான்காவது அணியால் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது திமுக ஆட்சியை பிடிக்குமா என்பதுதான் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+