ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவின் வோல்கா நதியை பார்வையிட சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர்.

அவர்களை காப்பாற்றும் முயற்சி பலன் தரவில்லை. தற்போது மரணம் அடைந்த 4 மருத்துவ மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஸ்டீபன், தாராபுரம் முகமது ஆஷிக், திட்டக்குடி ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் மரணம் அடைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications