தமிழக சட்டசபை தேர்தலில் யாரு ஜெயிப்பா? "எது நாலுமேவா?”.. இந்த ஒரு மீம் போதும்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்? என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி வலுவாக நிலவும் களத்தில் வெற்றி பெறப்போவது யார்? இதற்கான விடையை ஒரே மீமில் சிம்பிளாக சொல்லி இருக்காங்க..
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் வருகிற மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் தான் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்விக்கு பதில் கிடைக்கும்.

திமுக 2ஆம் முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா? அதிமுக இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுமா? புதிதாக அரசியல் களத்துக்கு வந்துள்ள விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடிக்குமா? நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுமா என் பெரும் விவாதமே அரசியல் களத்தில் நடந்து வருகிறது.
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதற்கான விடை வரும் மே 4 ல் தான் தெரியவரும். அதற்கிடையே, எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 29 ஆம் தேதி மாலை முதல் வெளியாகி வருகின்றன. அதில் ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு மாதிரியான கணிப்பை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான ஊடக கணிப்புகள் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. சில ஊடகங்கள் அதிமுக வெல்லும் எனக் கணித்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட எக்சிட் போல் கணிப்பில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் களத்தில் 2 கட்சிகள் பிரதானமாக போட்டியிட்டாலே யார் ஜெயிப்பார்கள் என்பது எளிதாக கணிக்கக்கூடிய விஷயமக இருக்காது. தற்போது திமுக, அதிமுக, தவெக, நாதக, சசிகலா - ராமதாஸ் அணி, வேல்முருகன் கூட்டணி என பல அணிகள் களத்தில் இருப்பதால், பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார்கள் என்ற கேள்விக்கு இந்த முறை பதில் சொல்வது சற்று கடினம் தான். போட்டிகள் பலமுனை கொண்டதாக இருப்பதால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நடக்கலாம்.
வேறு கட்சி பிரிக்கும் ஓட்டுகளால், முன்னிலையில் இருக்கக்கூடிய 2 கட்சிகளிடையே வெற்றி தோல்வியே தலைகீழாக மாறலாம் என்ற நிலை தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் நிலவுகிறது. மே 4 வந்தால் தான் தெரியும்.
தற்போதைய, எளிதாக கணிக்க முடியாத அரசியல் சூழலை ஒரே ஒரு மீம் நறுக்குனு சொல்லி இருக்கு..
இந்த தேர்தல்ல யாரு ப்ரோ ஆட்சிக்கு வருவாங்க
திமுகவா? அதிமுகவா? தவெகவா? நாதகவா?
நாலுமே வரட்டும்
நாலுமே எப்படி ப்ரோ வரும்..?
4 மே வரட்டும்...
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications