டைம் முடிஞ்சது.. இனிமே முடியாது.. உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா? இதை மறக்காம பண்ணிட்டீங்களா?
சென்னை: ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக விலாசத்தை மாற்றும் வசதி முடிவிற்கு வந்துள்ளது.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. முக்கியமாக மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் இருக்கின்றனர். இதில் 67 ஆயிரம் பேரை தவிர மற்ற எல்லோரும் ஆதாரை இணைத்துவிட்டனர்.

அதேபோல் நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
ஆதார் மாற்றம்: இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். ஜூன் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வந்துள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
வேறு குழப்பம்: அதே சமயம் ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக மாற்றும் மக்கள் பலர் ஒரே மாதிரியான பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சேவை இப்போது இலவசம் என்பதால் பலரும் ஆன்லைன் மூலம் விவரங்களை மாற்றுகின்றனர்.
ஆனால் விவரங்களை மாற்றியதும்.. பலரும் அவர்களின் பிறந்த வருடம் தானாக மாறுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது பிறந்த தேதி அல்லது வருடம் தானாக மாறும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இது எதுவும் bug ஆ அல்லது வேறு ஏதாவது தவறா என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாக விவரங்களை மாற்றிய பலர் இந்த சிக்கலை எதிர்கொண்டு உள்ளனர்.
அவர்கள் உதாரணமாக தங்களின் விலாசத்தை மாற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் அப்டேட் ஆகி வரும் விவரத்தில் தானாக பிறந்த நாள் தவறாக வந்துவிடுகிறது. பிறந்த நாள் போன்ற விவரங்களை மாற்ற நேரில் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஆதார் மையத்திற்கு மீண்டும் செல்ல வேண்டியதாக உள்ளது. அங்கே அவர்கள் 50 ரூபாய் பணம் கொடுத்து மீண்டும் அப்டேட் செய்ய வேண்டியதாக உள்ளது.
எனவே இனி ஆன்லைனில் உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்தால், பிறந்த தேதி, வருடம் சரியாக இருக்கிறதா என்பதையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications