ஆகா.. பஸ் பாஸ் பஞ்சாயத்து இனி இல்லை! அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்! வெளியான சூப்பர் செய்தி!
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் வகையில், விலையில்லா பயண அட்டை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மென்பொருள் தயாரிப்பு காரணமாக ஏற்கனவே இருக்கும் இலவச பயண அட்டைகளைக் கொண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன.
குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு தனியே பயண அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் மூலமாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெரும் வசதி அரசு போக்குவரத்து கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதற்காக மென்பொருள் தயாரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை அந்த பணிகள் நிறைவடையாத நிலையில் மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் தங்களுக்கான இலவச பேருந்து பயண அட்டையை பெற முடியாமல் தவிர்த்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் பயண அட்டைகளின் காலாவதி தேதி நிறைவடைந்தது. இதனால் பிரச்சனை எழுந்த நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை அந்த பயண அட்டைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை இணையதளம் பயன்பாட்டுக்கு வராத நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த பயண அட்டைகளை பயன்படுத்தலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப்போராட்டவீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த புதிய வசதிகளுடன் கூடிய மென் பொருள் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31.03.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30.06.2025 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு 30.09.2025 வரை நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications