மகளிர் இலவச பஸ் திட்டம்.. 1 குட்நியூஸ், 1 சோக நியூஸ்.. 70% ரூட்களும் போச்சே! புலம்புவது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் இலவச பஸ் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.. ஏற்கனவே மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் இருந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், தற்போது புறநகர் மற்றும் மலைப் பகுதிகளிலும் சாதாரண கட்டண பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை, நிம்மதியை தந்தாலும், மற்றொருபுறம் எதிர்ப்பும், கோரிக்கையும் கிளம்பி உள்ளது.. என்ன நடக்கிறது?

முதலமைச்சர் விஜய் தன்னுடைய அறிவிப்பில், "மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளிலும், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.

Free Bus Travel Scheme

மகளிர் இலவச பஸ் சேவை விரிவாக்கம்

வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநங்கையரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.. இதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.. பாமகவும் இதனை வரவேற்றுள்ளது.. 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி பலரும் இருக்கும்போது, அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றும் சவுமியா அன்புமணி வரவேற்று பேசியிருந்தார்

ஆனால், தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சியில் பெண்கள்

கிராமப்புறங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் பஸ்களிலும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

அரசின் இந்த விரிவாக்க திட்டம் தங்களுக்கு மரண அடியாய் மாறியிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதே இவர்களின் முக்கிய குமுறலாக உள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள்

இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால் அப்போது 63 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை மட்டும், இப்போது 100 ரூபாயை எட்டிவிட்டது. வாகன உதிரி பாகங்களின் விலையும் பன்மடங்கு எகிறிவிட்டது..

இதுபோக மகளிர் இலவசப் பயண திட்டத்தினால் பெரும்பாலான தனியார் பஸ்களில், பெண் பயணிகளின் எண்ணிக்கையும் மொத்தமாக சரிந்துவிட்டது. இதனால் 70 சதவீதத்திற்கும் அதிகமான ரூட்களில் பஸ்களை தொடர்ச்சியாக நஷ்டத்தில்தான் இயக்கி வருகிறோம்..

தமிழக அரசுக்கு கண்ணீர் கோரிக்கைகள்

பஸ் கட்டண உயர்வு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஸ்பெஷல் குழுவின் அறிக்கையை தமிழக அரசு இதுவரை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறது.. எனவே எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..

அல்லது அரசு பஸ்களில் வழங்குவதைபோல, மகளிர் இலவச பயண திட்டத்தை தனியார் பஸ்களிலும் அமல்படுத்தி, அதற்கான கட்டண இழப்பீட்டு தொகையை அரசே நேரடியாக வழங்க வேண்டும்" என்று கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஏழை எளிய பெண்களின் விடிவெள்ளியாக இந்த இலவச பஸ் திட்டம் பார்க்கப்பட்டாலும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் அடுத்தடுத்த ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+