டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ரெடியாகுறீங்களா? அரசு வெளியிட்ட குட் நியூஸ்.. மறக்காமல் இதை பாருங்க
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 2 / 2 ஏ தேர்விற்கு 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கு, பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என்றும், மென்பாடக்குறிப்புகளை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு பணிகளைப் பெற்றுள்ளனர்.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II/IIA (TNPSC GROUP II / IIA) தேர்விற்கு 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19.07.2024 ஆகும். தொகுதி II/IIA-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC GROUP II / IIA Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
14.09.2024-அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இத்தேர்விற்கான மென்பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து, மென்பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இத்தேர்விற்கான காணொலி பாடக்குறிப்புகள் "TN Career Services Employment" என்ற You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்கை கொண்ட போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ / மாணவிகள் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் திருமதி.எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications