சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எங்க மயானங்களை இலவசமாக யூஸ் பண்ணிக்கலாமே".. ஸ்டாலினுக்கு டிவீட் போட்டு டேக் செய்த ஈஷா!

ஈஷா மயானங்களில் சடலங்களை புதைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம் என்று ஈஷா அறிவித்துள்ளது.. இதுகுறித்த ட்வீட்டை, முதல்வர் ஸ்டாலின், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் டேக் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    எங்க மயானங்களை இலவசமாக யூஸ் பண்ணிக்கலாமே.. ஸ்டாலினுக்கு டிவீட் போட்டு டேக் செய்த ஈஷா!

    தற்போது கொரோனாவைரஸ் தொற்று பெருகி கொண்டிருக்கிறது. இதனால், உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன..

    தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

    வடமாநிலங்களில் தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.. ஆம்புலன்ஸ்களில் சடலங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்..

     கங்கை நதி

    கங்கை நதி

    மேலும் கங்கை ஆற்றிலும் சடலங்களை வீசி வருகின்றனர்.. தமிழகத்திலும் இப்படி ஒரு நிலைமை தலைதூக்கியது.. ஆனால், அதற்குள் தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு சரிசெய்துள்ளது.. இந்நிலையில், தமிழகத்தில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

     ஈஷா

    ஈஷா

    ஈஷா யோகா மையம் சார்பில், கோவையில் 12, சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம், 18 மயானங்கள் செயல்பட்டு வருகின்றன.. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது. மேலும், அனைத்து மயானங்களும் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

    மரியாதை

    மரியாதை

    இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த மயானங்களில்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஊழியர்கள் மரியாதையுடன் தகனம் செய்ய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது ஈஷா அறக்கட்டளை.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளது.

    ட்வீட்

    ட்வீட்

    அதில், "ஈஷா மயானங்கள், கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும்... இந்த உயிர் கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ட்வீட்டை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Free cremation in Isha cemeteries and tweeted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X