இலவச மின்சாரம் 200 யூனிட் இல்லையா? விஜய்யின் மின் திட்டத்தில் புதிய சிக்கல்.. குழப்பத்தில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கோட்டையில் தனது முதல் பணியாக 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. பல லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் மின்சார வாரியம், இந்த கூடுதல் சுமையை எப்படி சமாளிக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது..!!

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு விரிவுபடுத்தியுள்ளது..

free electricity scheme tamil nadu politics vijay government power subsidy electricity policy public confusion

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கும் மேல் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது.. இப்போது இந்தச் சலுகை 200 யூனிட்டாக உயர்ந்தால், அந்த செலவு இன்னும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இலவச மின்சாரம் 200 யூனிட்

பல லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் மின்சார வாரியம், இந்த கூடுதல் சுமையை எப்படி சமாளிக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது..

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத்தின் முன்னாள் பொறியாளர் சா.காந்தி பிபிசி சேனலுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "200 யூனிட் என்பது தேவையற்றது.. பெருவாரியான மக்கள் அதற்கும் மிகக் குறைவான மின்சாரத்தையே நுகர்கின்றனர்.. இப்போது வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கே அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 11,000 கோடி ரூபாய் வரை செலவாகிறது.

100 யூனிட் கரண்ட்

நூறு யூனிட் இலவசமாக வழங்குவதால் ஏற்படும் நஷ்டத்தைத் தானே 100% ஏற்றுக்கொள்வதாகக் கூறி, 2021 முதல் தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொண்டு வருகிறது.. இப்போது அதைவிட இரண்டு மடங்கு வழங்கும்போது அதற்கான செலவு மேலதிகமாகக் கூடும்.. அதை எப்படித் தொடர்ந்து கொடுக்கப் போகிறார்கள்?

இது இவர்கள் நினைப்பது போல் அவ்வளவு சாதாரணமானது இல்லை.. இவ்வளவு அதிகமான மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்கும் அளவுக்குத் தற்போதைய நிதிநிலை இல்லை.. இதன் காரணமாக, வேறு முதலீடுகளில் கவனம் செலுத்த முடியாத சிக்கலான நிலை ஏற்படலாம். இது வாரியத்தின் செயல்பாட்டையே பாதிக்கலாம்" என்று அந்த பேட்டியில் விரிவாகவே கூறுகிறார்..

மின் கட்டமைப்பு

அப்படியானால், மின் கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கான முதலீடுகள் இதனால் தாமதமாகலாம் என்ற கவலையும் உள்ளது.. வாக்குறுதியும் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையும் வேறுபடுவது அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தவெக தேர்தல் அறிக்கையில் "தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்" இலவசம் என்று கூறப்பட்டிருந்தது.. ஆனால் தற்போது வெளியான அரசாணையில் "இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்" என குறிப்பிடப்பட்டுள்ளது.. இதனால் நடைமுறையில் கூடுதல் சலுகை மிகக் குறைவாகவே இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

தமிழக மின்சார வாரியம்

பிரச்சாரத்தில் விஜய் சொன்னதற்கும்,இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள விதத்துக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.. குறிப்பாக 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு பழைய 100 யூனிட் சலுகை தொடர்வதால், பல நடுத்தர குடும்பங்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது..

மக்களுக்கு இலவசங்களை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான நிதியை நிர்வகிப்பது தான் அரசுக்கு பெரிய சவால்..

விஜய் செய்வாரா

மற்ற துறைகளின் வளர்ச்சியை பாதிக்காமல், மின்சார வாரியத்தின் நிலையைச் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயமும் இன்று உருவாகியுள்ளது.. இந்தத் திட்டம் நீண்ட காலத்தில் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இலவச சலுகைகள் மக்களுக்கு நிம்மதியைத் தரலாம்.. ஆனால் மாநிலத்தின் பொருளாதார சமநிலையும் அதே அளவுக்கு முக்கியம்.. இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது தான் அரசின் உண்மையான சோதனை என்றே சொல்லலாம்.. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+