என் சொந்த செலவில்.. 100 அரசு பள்ளிகளுக்கு லேப்டாப் தர போகிறேன்.. எம்பி பாரிவேந்தர் அசத்தல்!
இலவச லேப்டாப் தரப்போவதாக எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்
சென்னை: "என் தொகுதியில் உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் இலவசமாக லேப்டாப் வழங்க போகிறேன்" என்று எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதி தான் வேண்டும் என்று பாஜகவிடம் விடாமல் பிடிவாதம் பிடித்தவர் பாரிவேந்தர். இதற்கு காரணம், கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே அந்த தொகுதியில் பாரிவேந்தர் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பதுதான்.

தொகுதியை தர பாஜக மறுக்கவும்தான், ஸ்டாலினை நேரில் சந்தித்து, தன்னை கூட்டணியில் இணைத்து கொண்டதுடன் அதே பெரம்பலூர் தொகுதியை திரும்பவும் பெற்று தேர்தலை சந்தித்தார்.
இதில் தன்னை எதிர்த்து நின்ற சிவபதியை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற காரணம், தொகுதி மக்களுக்கு செய்த நல்ல காரியங்கள்தான். இப்போதுகூட மக்களுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் பாரிவேந்தர்.
தொகுதியில் உள்ள உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாரிவேந்தர், "உடலும் உள்ளமும் வலிமையாக இருந்தால் தான் விளையாட்டில் சாதிக்க முடியும். கிராமத்தில் தான் உழைப்பும் சக்தியும் இருக்கிறது. சீனா ஜப்பான், மக்கள் தங்கள் உடல் நலன்களை பாதுகாத்து வருகின்றனர். அதனால்தான் அவர்கள் ஆயுள்காலம் அதிகமாக உள்ளது.
பெரம்பலூர் தொகுதியில் உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். அரியலூரில் இருந்தது பெரம்பலூர், துறையூர் வழியாக ரயில்சேவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன். காவிரி, கங்கை, குண்டாறு இணைப்பு திட்டம் பற்றி மக்களவையிலும் வலியுறுத்தி இருக்கிறேன். இதைதவிர, பிரதமரிடமும் நேரில் வலியுறுத்தி உள்ளேன்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications