"அதை மட்டும் செஞ்சிடாதீங்க".. மேய்க்கால் நிலங்களுக்கு இனி பட்டாவா? அலறும் ரியல் எஸ்டேட் வல்லுநர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை வரன்முறைப்படுத்தி இலவச பட்டா வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கடந்த 2024ல் வெளியிடப்பட்ட அரசாணையில் சில தளர்வுகள் செய்ய திட்டமிட்டுள்ளதால், மேய்க்கால் நிலங்கள் கைநழுவும் சூழல் உருவெடுத்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதோடு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அதிகரிக்கும் என்று ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்..!!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு, அவற்றை முறைப்படுத்தி இலவச பட்டா வழங்கும் திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

Grazing Land Patta Tamil Nadu Free Patta Revenue Department

இந்த திட்டத்தின் கீழ், நீர்வழி பாதைகள், கோவில் நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு ஆகிய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்று ஆரம்பத்தில் ஏகப்பட்ட விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது மக்களிடம் இருந்து அதிக அளவில் மனுக்கள் குவிந்து வருவதால், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களையும் இந்த வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் சேர்த்து பட்டா வழங்க வருவாய்த்துறை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

சென்னை, செங்கல்பட்டு

கடந்த 2024ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கியப் பகுதிகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர்களை ஒட்டிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு இலவச பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மக்களுக்கான வருமான வரம்புகளும் தளர்த்தப்பட்டுப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.

இருந்தாலும் சுற்றுச்சூழல் மற்றும் பொதுப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக இந்த வகை நிலங்களிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளதால், மக்கள் தொடர்ந்து பட்டா கோரி விண்ணப்பித்து வருகிறார்கள்.. இந்த அழுத்தத்தின் காரணமாகவே, மேய்க்கால் நிலங்களையும் பட்டா வழங்கும் வரம்பிற்குள் கொண்டு வர அரசு சார்பில் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


வரன்முறைப்படுத்தப்பட்ட நிலம்

அரசு இந்த நிலங்களை வரன்முறைப்படுத்த நினைத்தாலும், இதனால் சமூகத்திலும் கிராமப் பொருளாதாரத்திலும் பெரும் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்..

ஏனென்றால் மேய்க்கால் நிலங்கள் என்பது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்வதற்காகவே பல தலைமுறைகளாக ஒதுக்கப்பட்டுள்ள பொது நிலங்கள் ஆகும். இந்த நிலங்கள் பட்டா நிலங்களாக மாறும்போது, கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகும்.

மேய்க்கால் நிலங்கள்

அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மேய்க்கால் நிலங்களுக்குச் சிறப்புச் சலுகையாக பட்டா வழங்கப்பட்டால், அதை முன்னுதாரணமாக கொண்டு மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மேய்க்கால் நிலங்களை ஆக்கிரமிக்கும் போக்கு கணிசமாக அதிகரிக்கும். இது சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும் என்று அலர்ட் செய்கிறார்கள் நிபுணர்கள்..

மேலும் பொது தேவைகளுக்காகவும் இயற்கை சமநிலைக்காகவும் ஒதுக்கப்பட்ட நிலங்களை தனிநபர்களுக்கு பிரித்து கொடுப்பது எதிர்காலத்தில் கடுமையான சுற்றுச்சூழல் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொது நிலங்களுக்கு பட்டா

வளர்ந்து வரும் சென்னை போன்ற பெருநகரங்களிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் வீடற்ற மக்களுக்கு பட்டா வழங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், பொதுப் பயன்பாட்டு நிலங்களின் தன்மையை மாற்றுவது ஆபத்தானது.

அதனால் ஏழை எளிய மக்களுக்கு உதவ நினைக்கும் அதேசமயம், மேய்க்கால் புறம்போக்கு போன்ற அத்தியாவசிய பொது நிலங்களுக்கு விலக்கு அளித்து பட்டா வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+