பெண்களுக்கு சூப்பர் நியூஸ்.. மின்சார பேருந்துகளிலும் இலவச பயணம்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்!
மின்சார பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் தொடரும் என்றார் அமைச்சர் சிவசங்கர்.
சென்னை : புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், அதற்கு டெண்டர் விடப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இதையடுத்து, ஆய்வுப் பணிகளுக்காகவே டெண்டர் விடப்பட்டிருப்பதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், உலக வங்கி நிதி உதவியுடன் சென்னையில் இயங்கவிருக்கும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து இயக்கம்?
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னையில் தனியார் பேருந்து இயக்கப்படவிருப்பதாக வெளியான செய்தி, தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் விளக்கம்
கடந்த அதிமுக ஆட்சியில், உலக வங்கி ஆயிரம் தனியார் பேருந்துகளை அரசு வழித்தடத்தில் இயக்குவதற்குப் பரிந்துரை செய்திருக்கிறது. உலகவங்கியின் பரிந்துரையை ஆய்வுசெய்வதற்கு இப்போது தகுந்த ஆலோசகர்களை எடுப்பதற்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. இந்த டெண்டர் மூலமாக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, அந்த ஆலோசகர்கள், சென்னையிலுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன் பின்னரே இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும் என்றார் அமைச்சர் சிவசங்கர்.

பேச்சுவார்த்தை
சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க அறிவுரை வழங்குவதற்கான ஆலோசகர் பணிக்கு அண்மையில் டெண்டர் கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.

பேச்சுக்கே இடமில்லை
அப்போது பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கியின் கருத்துருபடி, ஜிசிசி முறையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து, ஒப்பந்த அடிப்படையில் மாநகரப் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இலவச பயணம்
சென்னையில் மாநகர போக்குவரத்து தனியார் மயமாக்கப்படாது. புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும். மேலும், 500 புதிய மின்சாரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications