இனி தமிழகத்தில் மலைப் பிரதேசங்களில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம்.. இன்று முதல் தொடக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் மலைப் பிரதேசங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த தேர்தல் சமயத்தில் திமுக அளிக்க முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்பது தான். இந்த வாக்குறுதிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதேபோல தேர்தலில் வென்ற உடன் மகள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியது. நகர்ப்புறங்களில் இயங்கும் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பணிக்கலாம் என்ற முறை உள்ளது.
இதற்குத் தமிழ்நாடு முழுக்க மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் வேலைக்குச் செல்லும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகப் பெரியளவில் பலனடைந்துள்ளனர். இதற்கிடையே மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனப் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்று இருந்தது. அதன்படி மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக உதகையில் இத்திட்டம் இன்று தொடங்கப்படும்.. பிறகு படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications