சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்
சென்னை: என் நண்பனின் தந்தை கேஸ் ஏஜென்சி வைத்துள்ளார் என்றும், அவருக்கு ஒரு நாள் வருமானம் 9 ஆயிரம் என்றும் மாதம் அவருக்கு 1.90 லட்சம் வருமானம் வருகிறது என்றும். ஆண்டுக்கு 22 லட்சத்து 80 ஆயிரம் வருமானம் வருவதாகவும் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலர் கேஸ் ஏஜென்சியில் இவ்வளவு வருமானம் வருகிறதா என்று வாயை பிளக்கிறார்கள். நடைமுறையில் அந்த அளவிற்கு லாபம் கிடைப்பது என்பது சாத்தியமே இல்லை.. கேஸ் ஏஜென்சிக்கு அவர்கள் கட்டும் வைப்பு தொகை, மற்றும் கட்டமைப்பு செலவை ஒப்பிடும் போது லாபம் மிக குறைவு தான். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
இணையத்தில் உலா வரும் கணக்கீட்டைப் பிரித்துப் பார்த்து, அதன் யதார்த்த நிலையை விரிவாக பார்ப்போம். நெட்டிசன் கொடுத்த தரவுகளின்படி கணக்கீடு இப்படி அமைகிறது:

வருவாய் கணக்கீடு
ஒரு சிலிண்டருக்கான கமிஷன்: ₹60
ஒரு நாளில் விற்பனையாகும் சிலிண்டர்கள்: 150
தினசரி மொத்த வருமானம்: 150*60 : ₹9,000
மாதாந்திர மொத்த வருமானம் (30 நாட்கள்): 9,000
மாத வருமானம் ₹2,70,000
இந்த ₹2,70,000 என்பது அவரது கைக்கு வரும் மொத்தத் தொகை . இதில் இன்னும் செலவுகளைக் கழிக்கவில்லை.
செலவுகள்
(மாத சம்பளம் - ₹80,000)
இந்த ₹80,000 செலவில் எவையெல்லாம் அடங்கும் என்பது மிக முக்கியம்
ஊழியர் சம்பளம்: ஆபீஸ் ஸ்டாப், கணக்காளர் மற்றும் டெலிவரி செய்பவர்கள்.
வாகனச் செலவு: சிலிண்டர் சுமந்து செல்லும் வண்டிகளுக்கான டீசல் மற்றும் பராமரிப்பு.
வாடகை & மின்சாரம்: கேஸ் கோடவுன் (Godown) மற்றும் அலுவலக வாடகை.
இன்சூரன்ஸ் & உரிமம்: ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அரசு கட்டணங்கள்.
நிகர லாபம் மாதாந்திர லாபம்: 2,70,000 - 80,000 = ₹1,90,000
ஆண்டு வருமானம்: ₹22,80,000
இது தான் நெட்டிசன் பகிர்ந்த தகவல்.. ஆனால் இதில் ஒளிந்துள்ள யதார்த்தமான உண்மைகள் பற்றி பார்ப்போம் இந்தக் கணக்கீடு கேட்பதற்கு மிகச் சிறப்பாக இருந்தாலும், நடைமுறையில் சில மாற்றங்கள் இருக்கும்
டெலிவரி கட்டணத்தை பொறுத்தவரை வழக்கமாக ஒரு சிலிண்டருக்கான கமிஷனில் (₹60), பெரும் பகுதி டெலிவரி செய்யும் நபர்களுக்கே கூலியாகச் சென்றுவிடும். ஒரு சிலிண்டருக்கு ₹30 முதல் ₹40 வரை கூலி மற்றும் டீசல் செலவுக்கே போய்விடும். அப்படிப் பார்த்தால், ஒரு சிலிண்டருக்கு ஏஜென்சிக்கு நிகரமாக மிஞ்சுவது ₹20 - ₹25 மட்டுமே.
விற்பனை அளவு என்பது தினமும் 150 சிலிண்டர் என்பது ஒரு சராசரி விற்பனை. ஆனால், சில நாட்களில் புக்கிங் குறைவாக இருக்கலாம். மாதத்திற்கு 4,500 சிலிண்டர்கள் விற்பனை செய்ய சுமார் 10,000 முதல் 12,000 நிரந்தர வாடிக்கையாளர்கள் அந்த ஏஜென்சிக்கு இருக்க வேண்டும். முதலீடு : இந்த வருமானத்தைப் பெற, தொடக்கத்தில் சிலிண்டர் பாதுகாப்பு வைப்புத்தொகை), கோடவுன் கட்டமைப்பு என ₹50 லட்சம் முதல் ₹1 கோடி வரை முதலீடு தேவைப்படும்.
அந்த முதலீட்டிற்கான வட்டியைக் கணக்கிட்டால், உண்மையான லாபம் சற்று குறைவாகவே இருக்கும். எனினும் இந்தக் கணக்கீடு சாத்தியமே, ஆனால் அதற்கு அந்த ஏஜென்சிக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் வட்டம் இருக்க வேண்டும். அத்துடன் நிர்வாகச் செலவுகளை மிகத் துல்லியமாகக் குறைக்க வேண்டும். நடைமுறையில், எல்லாச் செலவுகளும் போக ஒரு நடுத்தர ஏஜென்சிக்கு மாதம் ₹1 லட்சம் முதல் ₹1.25 லட்சம் வரை லாபம் கிடைப்பதே பெரிய விஷயம் ஆகும்.












Click it and Unblock the Notifications