"என்னாச்சு".. கன்னத்தை தடவி கேட்ட ஓபிஎஸ்.. "சும்மாதான்".. பட்டும் படாமல் பதில் சொன்ன "மெகா புள்ளி"
வைகைசெல்வத்திடம் தாடி குறித்து விசாரித்தார் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் நித்தம் ஒரு களேபரம் ஓடிக் கொண்டிருந்தாலும், சுவாரஸ்யங்கள் மற்றொருபுறம் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது..!
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை நல்ல மதிப்பை பெற்று வருபவர் வைகை செல்வன்... அவரது பேச்சு, எழுத்துக்கு ஒரு வாசகர் கூட்டமே உள்ளது.
அதனால் அதிமுகவில் எப்போதுமே பலம் பொருந்திய நபராக வலம் வந்து கொண்டிருப்பவர்.. எந்த கருத்தை சொன்னாலும் அதை ஆழமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைப்பவர்.

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் வைகைச் செல்வன், ஏற்கனவே 2011ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் களம் கண்டார். ஆனால், 10 வருட அதிமுக ஆட்சியில் மக்கள் ரொம்பவே அதிருப்திக்குள்ளாகி இருந்தனர்..

பிரச்சாரம்
அதனால், தொகுதியில், வைகைச்செல்வன் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடுபட்டபோது, அமைச்சராக இருந்தபோது என்ன செய்தீங்க? என்று ஒரு தாத்தா கேள்வி எழுப்பிய சம்பவமும் நடந்தது. "நீங்கள் இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தபோது தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? இப்போ வாக்கு கேட்டு வந்துட்டீங்களா?" தொகுதியில் பல இடங்களில் பொதுமக்கள் கேள்விகளை கேட்டனர்.. இந்த தேர்தலிலும் வைகைசெல்வன் தோற்றுவிட்டார்.

வைகைசெல்வன்
அதற்கு பிறகு அவரது செயல்பாடுகள் குறைந்து வருகிறது.. சமீப காலமாக வைகைச்செல்வனும் முகத்தில் தாடி வைத்து காணப்படுகிறார். இந்நிலையில், நேற்று ஓபிஎஸ்ஸும், வைகைச்செல்வனும் மதுரை ஏர்போர்ட்டில் பேசி கொண்டிருந்தனர்.. ஏர்போர்ட்டில் இருக்கும் டீக்கடையில் 2 பேரும் டீ குடித்து கொண்டிருந்தனர்.. அப்போது ஓபிஎஸ், வைகைசெல்வனின் தாடியை பார்த்து, என்னாச்சு? தாடி எதுக்கு? என்று சைகையிலேயே கேட்டார். அதற்கு வைகைச்செல்வன் "சும்மாதான் வெச்சிருக்கேன்" என்று சைகையிலேயே ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்தார்.

என்ன காரணம்?
உண்மையிலேயே வைகைச்செல்வன் எதுக்கு தாடி வைத்திருக்கிறார்? தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதால் வருத்தமா? அல்லது கொரோனாவுக்கு சலூன் கடைகள் எல்லாம் மூடியிருப்பதால் ஷேவ் செய்ய முடியவில்லையா? அல்லது சசிகலா - எடப்பாடி இடையே நடந்து வரும் உட்பூசல்களை பார்த்து வேதனையில் தாடி வளர்த்துள்ளாரா? தெரியவில்லை...!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications