உயிருள்ள பாம்பை விழுங்கிய அசுர தவளை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! பார்த்து நடுங்கிய நெட்டிசன்கள்
சென்னை: இயற்கையின் கணக்குகள் எப்போதுமே மனித மூளைக்கு எட்டாத ஏகப்பட்ட அதிர்ச்சியையும், விவரிக்க முடியாத எச்சக்கமான ஆச்சரியங்களையும் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன... அந்தவகையில் இதோ இப்போதும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
"பாம்பு என்றால் படையும் நடுங்கும்... தவளை என்றால் பாம்பு விழுங்கும்!" என்பதுதானே நாம் காலம் காலமாகப் பார்த்து பழகிய இயற்கையின் மாறாத விதி...

ஏனென்றால் நீர்நிலைகளின் ஓரத்திலும், புதர் மறைவிலும் தவளைகளை பார்த்தாலே அப்படியே லட்டுபோல லேக்காக விழுங்கிவிடும் பாம்புகள்.. அந்த அளவுக்கு பாம்புகளின் வேட்டைத் திறனை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.
பாம்பை விழுங்கும் தவளை
தவளைகளை பாம்புகள் உண்பதற்கு காரணம், தவளைகளின் உடலில் கடினமான தோலோ அல்லது கூர்மையான முட்களோ இல்லை. அதனால்தான் பெரும்பாலான பாம்பு வகைகளுக்கு தவளைகள் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய, சத்துள்ள முக்கிய உணவாகவே இருந்து வருகின்றன.
ஆனால், இப்படிப்பட்ட இயற்கையின் விதியையே தலைகீழாகத் திருப்பிப்போட்டு, இணைய உலகையே பெருமளவில் ஷாக் ஆக்கியிருக்கிறது ஒரு வைரல் வீடியோ! ஆமாம், வழக்கமாக பாம்புக்கு இரையாகும் தவளையே, ஒரு பாம்பை உயிருடன் லபக்கென விழுங்கியிருக்கிறது.. அந்த வீடியோ காட்சி,தான், பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பெரிய தவளை - குட்டி பாம்பு
அந்த வீடியோவில், ஒரு பெரிய தவளை, தனது வாயால் ஒரு குட்டி பாம்பை பாம்பை கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறது. பாம்போ தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக துடிதுடித்து, நெளிந்து போராடுகிறது. ஆனால், அந்த தவளையோ தன் பிடியை சிறிதும் தளர்த்தாமல், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பாம்பை அப்படியே முழுவதுமாக தொண்டைக்குள் இறக்குகிறது.

பொதுவாக சின்ன சின்ன பூச்சிகளையும், வண்டுகளையும் மட்டுமே இரையாக கொள்ளும் ஒரு தவளை, தன்னை வேட்டையாடும் பாம்பையே எதிர்த்து வேட்டையாடியது எப்படி? என்று இயற்கை ஆர்வலர்கள் ஆராய துவங்கியிருக்கிறார்கள்..
இதுதான் காரணமா
உணவிற்கான தட்டுப்பாடு அதிகரிக்கும்போது அல்லது தன்னுடைய எல்லையைப் பாதுகாக்க நினைக்கும்போது, தவளைகள் இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைப் பெற்று பரவி வருகிறது. வழக்கமாக சிறிய விலங்குகளை வேட்டையாடும் பாம்புகளே தவளைகளையும் இரையாக்கும் நிலையில், இங்கு தவளையே வேட்டையாடியாக மாறியிருப்பது இணையவாசிகளிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், "என்னது... தவளை பாம்பை சாப்பிடுதா? செம ஷாக்!" என்றும், "இயற்கையின் ரகசியம் எப்போதுமே ஆபத்தானதுதான்!" என்றும் விதவிதமாக கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
