"ஜெயிண்ட் கில்லர்" முதல்வர் நாற்காலியும்! அதிர்ச்சி தோல்வியும்! புயலே அடித்தாலும் அசராத ஒரே முதல்வர்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் பதவியில் இருந்து கொண்டே, தங்களது சொந்தத் தொகுதியில் தோல்வியைத் தழுவுவது என்பது அரிதான ஒன்று என்றாலும் அதிரடியான நிகழ்வாக இருந்து வருகிறது. 1967 முதல் தற்போது 2026 வரை இத்தகைய 'ஜெய்ண்ட் கில்லர்' (Giant Killer) சம்பவங்கள் தொடர்கின்றன. அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தை ஆண்ட முக்கிய முதலமைச்சர்கள் தங்களின் கோட்டை எனக் கருதப்பட்ட தொகுதிகளிலேயே தோல்வியடைந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

காமராஜர் (1967): ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த 'படிக்காத மேதை' காமராஜர், 1967-ல் விருதுநகர் தொகுதியில் திமுகவின் மாணவர் அணித் தலைவர் சீனிவாசனிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
பக்தவச்சலம் (1967): அதே 1967 தேர்தலில், பதவியில் இருந்த முதல்வர் பக்தவச்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுகவின் ராஜரத்தினத்திடம் 8,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஜானகி ராமச்சந்திரன் (1989): எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் முதல்வரான இவர், 1989-ல் ஆண்டிபட்டி தொகுதியில் திமுகவின் ஆசியனிடம் 4,221 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார்.
ஜெயலலிதா (1996): 1991-96 வரை அசுர பலத்துடன் ஆட்சி நடத்திய ஜெயலலிதா, 1996-ல் பர்கூர் தொகுதியில் திமுகவின் சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலின் (2026): தற்போதைய 2026 தேர்தலில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் மூன்று முறை வென்ற கொளத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
தோல்வியடையாத முதல்வர்
எத்தனை புயலே அடித்தாலும் ஒரு முறை கூட தோல்வியடையாதவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 13 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தவர்.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநில முதல்வர்களின் தேர்தல் முடிவுகளும் பல்வேறு திருப்பங்களைக் கொண்டுள்ளன.
மேற்கு வங்க முதலமைச்சர் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சுவேந்து அதிகாரியிடம் 15,114 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.
அதேவேளையில், புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, மங்கலம் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். ரங்கனை 7,050 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வ சர்மா, ஜாலுக்பாரி சட்டசபைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பிதிஷா நியோக்கை 89,434 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்துப் அபார வெற்றியைப் பதிவு செய்தார்.
கேரள முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான பினராயி விஜயன், தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத்தை 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்; இருப்பினும், அவரது கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
தமிழகத்தின் தற்போதைய தேர்தல் நிலவரத்தைப் பொறுத்தவரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இத்தேர்தலில் தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், 1977-ல் அதிமுக பெற்ற 30.40% வாக்கு சதவீத சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தோல்வி மட்டுமின்றி, திமுக அமைச்சரவையில் 15 அமைச்சர்களும், சபாநாயகரும் தோல்வியடைந்தது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications