கள போராளிகள் முதல் சினிமா பிரபலம் வரை.. கமல்ஹாசன் தேர்வு செய்ய போகும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் பிரபலமான நபர்களை தேர்தலில் போட்டியிட வைக்க உள்ளது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் பிரபலமான நபர்களை தேர்தலில் போட்டியிட வைக்க உள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட உள்ளது. இந்த தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் முக்கியமான திட்டங்களை வைத்து உள்ளது.

பிரபலமான நபர்கள்
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் இரண்டு விதமான வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. ஒருவர் அதிக அரசியல் அறிவு கொண்டவர்கள், சமூக போராளிகள், களத்தில் நீண்ட காலமாக போராடும் நபர்கள். இன்னொரு வகை, சினிமா பிரபலங்கள். சினிமாவில் பிரபலமாகி தற்போது அரசியலுக்கு வர இருப்பவர்களை அவர் தேர்தலில் நிற்க வைக்க உள்ளார்.

எப்படி தேர்வு செய்கிறார்
இதில் சமூக, கள போராளிகளை பல கட்ட கேள்விகள் கேட்டு தேர்வு செய்கிறார். இதற்கு முன் ஆற்றிய களப்பணிகள், கலந்து கொண்ட போராட்டங்கள், அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதியின் பிரச்சனைகள் என்று பல கேள்விகளை அவர்கள் தொடர்ந்து கேட்டு, அதன்பின் தேர்வு செய்கிறார். 8 பேர் கொண்ட குழு இந்த தேர்வை நடத்துகிறது.

இன்னொரு வகை
அதன்படி இன்னொரு வகையில், சினிமா நடிகர்கள், நடிகைகள், திரைபிரபலங்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இவர்கள், அவர்கள் பிறந்த ஊரிலேயே நிற்க வைக்கப்பட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, சினேகன், கோவை சரளா, நாசர் ஆகிய முக்கிய நபர்கள் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

யார் போட்டியிட வாய்ப்பு
மக்கள் நீதி மய்யம் சார்பாக பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. கமல்ஹாசன், கமீலா நாசர், கோவை சரளா, கார்ட்டூனிஸ்ட் மதன், மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம், சினேகன், நாசர் ஆகிய நபர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். 40ல் மொத்தம் 12 பேர் இதில் பிரபலங்களாக இருக்க வாய்ப்புள்ளது.

எத்தனை பேர்
மக்கள் நீதி மய்யமே எதிர்பார்க்காத வகையில் மொத்தம் 1300 பேர் வரை விருப்பமனு அளித்து இருக்கிறார்கள். 40 தொகுதியில் நேற்று 12 தொகுதிகளுக்கு மட்டுமே நேர்காணல் நடந்தது. இன்று மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications