அடையாறு, பெசன்ட் நகர், தாம்பரம், வேளச்சேரி.. எல்லாமே முக்கிய ஏரியா.. இன்று பிற்பகல் வரை நோ மின்சாரம்
சென்னை: சென்னையில் தினசரி பல பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாகக் காலை 9 மணி முதல் பிற்பகல் வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதன்படி இன்று அடையாறு, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
மின்சார பாரமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது சென்னையில் தினசரி குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். அப்போது வழக்கமான மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இன்றைய தினம் அடையாறு, பெசன்ட் நகர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
வேளச்சேரி பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஓரண்டி அம்மன் கோயில் தெரு, ஜகன்னாத புரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் குடியிருப்புகளில் இன்று மின்சாரம் இருக்காது.
அதேபோல அடையாறு பகுதியில் பெசன்ட் நகர், ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரைச் சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்குச் சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சேரி சாலை, காந்தி நகர் கிரசன்ட் அவென்யூ சாலை, கிரசன்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி சாலை, மருந்தீஸ்வர் நகர், எல்பி சாலை, கால்வாய் வங்கி சாலை, கேபி நகர் 1-3 பிரதான சாலைகள், கேபி நகர் 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு, பிவி நகர் 1வது மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார் படேல் சாலை, பக்தவத்சலம் 1வது தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும்.
பல்லாவரம்: திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்குப் பகுதி மற்றும் திருசூலம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் தெரு மற்றும் ஆர்பி ரோடு மற்றும் புருசோத்தமன் நகர் பகுதி பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
வட சென்னை: வியாசர்பாடி பகுதியில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புது நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட், சென்ட்ரல் கிராஸ் தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர் 1வது- மற்றும் 42 தெரு, சாமியார் கார்டன், பள்ளத் தெரு 1-3வது தெரு, உதய சூரியன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர் பகுதிகளிலும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி பகுதியில் பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரில் மின்சாரம் இருக்காது.
சென்னை புறநகர்: தாம்பரம் பகுதியில் ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎஃப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்க அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ பகுதியில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications