தைராய்டு டூ கேன்சர் வரை வரும்.. நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து வழங்கிய வழிகாட்டுதலில் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

நான் ஸ்டிக் எனப்படும் ஒட்டாத சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அவர்கள் அறிவுறுத்தி உள்ள அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நான் ஸ்டிக் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அவர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

From cancer to so many health hazard ICMR advices against Non Stick cookwares

நான்-ஸ்டிக் குக்வேர் அதன் ஒட்டாத மேற்பரப்பு காரணமாக சமைப்பதற்கு வசதியான, விருப்பமாக பாத்திரமாக நீண்ட காலமாக பார்க்கப்பட்டது. இது சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது மற்றும் சமையலுக்கு குறைந்த எண்ணெய் தேவைப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் சுகாதார நிபுணர்களால் எழுப்பப்பட்ட எச்சரிக்கைகள் நான்-ஸ்டிக் குக்வேர்களின் மீது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் நான்-ஸ்டிக் குக்வேர்கள் கடுமையான பக்க விளைவுகளை கொண்டு இருக்கலாம். நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புகளை கொண்டு இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர்: ஐசிஎம்ஆர் அறிக்கையில், நான்-ஸ்டிக் குக்வேரின் முதன்மையான கவலைகளில் ஒன்று அதில் இருக்கும் அமிலங்கள் என்று கூறப்பட்டு உள்ளது. பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (பிஎஃப்ஓஏ) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (பிஎஃப்ஓஎஸ்) ஆகியவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.

இவை டெஃப்ளான் போன்ற ஒட்டாத பூச்சுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும். ஒட்டாத சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது, ​​இந்த இரசாயனங்கள் நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடலாம், இந்த புகையை சுவாசிக்கும் நபர்களுக்கு உடல்நல அபாயங்கள் ஏற்படும்.

இந்த புகைகளை உள்ளிழுப்பது சுவாச பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. PFOA ஆனது polyfluoroalkyl (PFAS) எனப்படும் இரசாயனங்களின் வகுப்பைச் சேர்ந்தது. PFOA உடலில் சேர்ந்தாலும் சில நாட்களில் படிப்படியாக கரைந்துவிடும். ஆனால் சில வகை PFAS கலவைகள் உடலில் தங்கி விடும். இதனால் உடலில் கடும் பாதிப்புகள் ஏற்படலாம். இது சில நான்-ஸ்டிக் குக்வேர்களில் இன்னும் உள்ளது.

சூடு: முக்கியமாக நான்-ஸ்டிக் குக்வேர், குறிப்பாக பாலிடெட்ராபுளோரோஎத்திலீன் (PTFE அல்லது டெஃப்ளான்) பூசப்பட்டவை, அதிக வெப்பமடையும் போது நச்சுப் புகைகளை வெளியிடலாம். இது மனிதர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பறவைகளுக்கு ஆபத்தானது. தோல் பாதிப்பு, சுவாச பாதிப்பு, கேன்சர் போன்றவற்றை ஏற்படுத்தும்.

மனிதர்களில் இதன் மூலம் ஏற்படும் புற்றுநோய்க்கான நேரடி ஆதாரங்கள் உறுதியாக நிறுவப்படவில்லை என்றாலும், டெல்ஃபான் தயாரிப்பில் முன்பு பயன்படுத்தப்பட்ட பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA), புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வெப்பத்தில் ஒட்டாத சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவது மற்றும் கீறப்பட்ட அல்லது சேதமடைந்த பாத்திரங்களைத் தவிர்ப்பது ஆபத்துகளைத் குறைக்கும். மேலும், காலப்போக்கில், ஒட்டாத மேற்பரப்பு சீரற்றதாகி, சமையல் செயல்திறனை பாதிக்கும் மற்றும் உணவை எரிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஏற்கனவே உங்களிடம் நான் ஸ்டிக் பாத்திரம் உள்ளது என்றால், அந்த நான் ஸ்டிக் பாத்திரங்களை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+