தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்!
சென்னை: கடந்த மார்ச் 25 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செல்வம், அடுத்த நாளே விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இந்நிலையில், செல்வம் தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் தவெக வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பம்பரமாக சுழலத் தொடங்கியுள்ளன. இந்த முறை தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்கிறது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி, சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடும் தொகுதி என்பதால் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கு அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். இந்நிலையில் தவெக சார்பில் செல்வம் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார் விஜய்.
இந்த செல்வம் வேறு யாரும் அல்ல. கடந்த 25 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் தான் இந்த செல்வம். அடுத்த நாளே தவெக தலைவர் விஜய்யை பனையூரில் சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார் செல்வம். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த டி செல்வம் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அடுத்த 3 நாட்களில் பி.டி.செல்வத்தை வேட்பாளராக அறிவித்துள்ளார் விஜய். அதுவும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் டி.செல்வம் வேட்பாளர் ஆகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications