கனகசபை.. குழந்தை திருமணம்.. நிதி மோசடி.. சிதம்பரம் கோவிலில் நடப்பது என்ன? ஷாக்கிங் பின்னணி!
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. கனகசபை விவகாரம் தொடங்கி குழந்தை திருமணம் வரை பல விஷயங்களில் இந்த கோவில் தீட்சிதர்கள் சிக்கி உள்ளனர். அந்த கோவிலில் இதுவரை அப்படி என்னதான் நடந்தது? ஒரு சின்ன ரீகேப்..
கடந்த வருடத்திற்கு முன்பு வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் பெண் ஒருவரை தீட்சிதர் கனகசபை மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மற்ற தீட்சிதர்கள் அதனை தடுத்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் அப்பெண்ணை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை கடந்த வருடம் மே மாதம் வெளியிட்டது.
ஆய்வு: இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், கோவில் நிதி மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள், மனுக்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்தது. பொது கோவில்களில் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால், அறநிலையத்துறை கடந்த வருடம் ஜூன் மாதம் அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது.
ஆனால் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்தனர். கோவில் கணக்கு வழக்கு விவரங்களை வழங்க மறுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக்கோவில் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி ஆய்வு செய்ய முடியும். ஆனாலும் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தை திருமணம்: இதையடுத்து சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள குழந்தை திருமணத்தில் விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 13 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.கடந்த வருடம் 15 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வருடம் இந்த திருமணம் நடந்த நிலையில் இந்த வருடம்தான் அந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தால் உண்மை வெளியாகிவிடும் என்பதற்காக அந்த சிறுமியை அவர்கள் மறைத்து வைத்துள்ளனர். திருமண பதிவுகளை வைத்துதான் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
ஆளுநர் ரவி பேட்டி: இதையடுத்து சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை, தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர். என் ரவி அளித்த பேட்டியில், கோவில்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் இந்த தமிழ்நாடு பாராட்ட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுத்ததுதான். அதை ஏற்றுக்கொள்கிறேன்.
அவ்வளவு நிலங்களை மீட்டது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை எல்லாம் மீட்கவில்லை. இதுவரை செய்யப்பட்ட மீட்பு மிகவும் சிறியதாக உள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள்.
பழிவாங்கும் வகையில், சமூக நலத் துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் வைத்தனர்.
ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்து உள்ளது, என்று கூறினார்.
இரட்டை விரல்:அங்கே விரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு ஆளுநர் சொன்னது பொய் என்று பதில் அளித்தது. அதோடு மருத்துவர்கள் சங்கமம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும் அங்கே விரல் பரிசோதனை நடக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.விரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி சொன்ன நிலையில் மறுப்பு தெரிவித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் ஆனந்த் சிதம்பரத்தில் நடத்திய விசாரணைக்கு பின் மறுப்பு தெரிவித்துள்ளார். தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் அப்படி எதுவும் சோதனை நடக்கவில்லை என்று குழந்தைகள் மற்றும் தீட்சிதர்கள் ஒப்புக்கொண்டனர், என்றுள்ளார்.
கைது: இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார். அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தால் உண்மை வெளியாகிவிடும் என்பதற்காக அந்த சிறுமியை அவர்கள் மறைத்து வைத்துள்ளனர். திருமண பதிவுகளை வைத்துதான் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
கொடுமை: இந்த சிறுமிக்கு திருமணம் செய்ததோடு மட்டுமின்றி போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த சிறுமியை ஒளித்து வைத்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்ய விடாமல், சிறுமி ஊரில் இல்லை என்று கூறி, வீட்டிற்கு உள்ளேயே அறை ஒன்றில் ஒளித்து வைத்து உள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் மூவர் தவிர இன்னும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கைதான 3 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பதிவான 22 வழக்குகளில் 4 குழந்தை திருமண வழக்குகளில் 11 தீட்சிதர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இப்படி சிதம்பரம் நடராஜர் கோவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. இப்போது கனகசபை விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க தமிழ்நாடு அறநிலையத்துறை முயன்று வருகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications