சென்னைக்கு பக்கத்தில் திறந்தாச்சு டோல் கேட்.. மீண்டும் வசூல்.. விழிக்கும் வாகன ஓட்டிகள்!
சென்னை: இத்தனை நாட்களாக பழைய மகாபலிபுரம் சாலையில் சுங்க கட்டணம் இல்லாமல் பயணித்த நிலையில் தற்போது அடுத்த வாரம் முதல் சுங்க வரியை வசூலிக்க தமிழக சாலை மேம்பாட்டு கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சென்னை அவுட்டர் ரிங் ரோடு, வரதராஜபுரம், கொலப்பஞ்சேரி (நசரத்பேட்டை அருகில்), நெமிலிசேரி மற்றும் சின்னமுல்லைவாயல் ஆகிய 4 இடங்களில் சுங்க வரி வசூல் செய்வது குறித்து சோதனை ஓட்டம் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து இனி அடுத்த வாரம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை ரூ 1,081 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் 1 தொடங்கியது. அது போல் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை மற்றொரு சாலை அமைக்கும் திட்டமும் முடிவடைந்து மக்கள் போக்குவரத்திற்காக கடந்த பிப்ரவரி முதல் திறக்கப்பட்டது.

30 ஆயிரம் வாகனங்கள்
மேற்கண்ட 4 இடங்களில் சுங்கசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளை நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அடுத்த வாரம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சாலை மேம்பாட்டு கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மேற்கண்ட 4 இடங்களில் சுங்க வரி வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.

ரூ 40 வசூலிக்க
அடுத்த வாரம் தொடங்கவுள்ளதால் ஃபாஸ்ட் டேக் ஸ்கேனர்கள், சுங்க வரி வசூலிக்கும் முறை, சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சரிவர இயங்குகிறதா என்பதை சோதனை செய்துவிட்டோம். சுங்க வரியை வசூலிக்க தனியார் அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு ரூ 40 வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். இறுதி விலை பட்டியல் இன்னும் முடிவாகவில்லை.

43 கோடி ரூபாய்
அந்த தனியார் நிறுவனம் ஆண்டுதோறும் ரூ 43 கோடி லாபம் பெறும் என்றார். இதுகுறித்து பட்டாமிராமை சேர்ந்த ஒருவர் கூறுகையில் சுங்க வரி வசூல் செய்யும் பகுதிகளில் 4 சாலைகள் கூடுகின்றன. இங்கு நிறைய தொழிற்பேட்டைகள் உள்ளன. எனவே கனரக வாகனங்கள் நிறைய இயக்கப்படும். எனவே சாலை பாதுகாப்பு குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.

எந்த சாலைகள் இணைப்பு
சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளை தமிழக அரசு சரியாக பராமரிக்க வேண்டும் என்றார். சென்னை அவுட்டர் ரிங் ரோடு என்பது வண்டலூரையும் மீஞ்சூரையும் இணைக்கும் சாலை. இதன் நீளம் 60 கி.மீ. கட்டுமான கட்டணம் ரூ 2,156 கோடியாகும்.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications