லட்சத்தீவு சுற்றுலா எல்லாம் ஓகே! ஆனா அங்க காலடி எடுத்து வைக்கவே இத்தனை ரூல்ஸ் இருக்கே.. என்ன பாருங்க
சென்னை: மாலத்தீவு சர்ச்சை காரணமாக இந்தியர்கள் பலரும் இப்போது லட்சத்தீவுக்கு செல்ல விரும்புகிறார். அரபிக்கடலில் அமைந்துள்ள இந்த தீவுக்கு செல்ல நாம் என்ன செய்ய வேண்டும். அங்கே எப்படிச் செல்லலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையானது. இதையடுத்து இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்குச் செல்ல விரும்பாமல் புக்கிங்குகளை கேன்சல் செய்து வருகின்றனர்.

அதேநேரம் லட்சத்தீவு செல்ல இந்தியர்கள் பலரும் விரும்புகின்றனர். சரி இந்த நேரத்தில் லட்சத்தீவு செல்ல விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
லட்சத்தீவு: அரபிக் கடலில் அமைந்துள்ள லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிட்டதாகப் பகுதிகளில் ஒன்றாகும். உலக நாடுகளைச் சுற்றி வருவோர் கூட நமது லட்சத்தீவுக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், சுற்றுலா செல்ல விரும்புவோர் கண்டிப்பாகச் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று தான் இந்த லட்சத்தீவு.. இந்தியாவின் மிக அழகான மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று இந்த லட்சத்தீவு.. மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகளைக் கொண்டதே லட்சத்தீவு..
என்னதான் இத்தனை தீவுகள் இருந்தாலும் அதில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். நகரங்களின் சலசலப்பிற்கு பிரேக்விட்டு அழகிய இடத்தில் விடுமுறையைக் கழிக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் லட்சத்தீவுக்கு செல்லலாம். லட்சத்தீவு 1956இல் நமது நாட்டின் யூனியன் பிரதேசமாக ஆனது. இப்போது இந்தியாவில் இருக்கும் எட்டு யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
36 தீவுகள்: லட்சத்தீவில் மொத்தம் 36 தீவுகள் இருக்கும் போதும் முன்பே கூறியது போல அதில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக அதில் மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு ஆகியவை பிரபலமான சுற்றுலா இடங்கள்.

அடுத்து விஷயத்திற்கு வருவோம் லட்சத்தீவை நாம் எப்படி அடையலாம். தற்போது லட்சத்தீவை கொச்சி மூலம் மட்டுமே அடைய முடியும். கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு விமானம் மற்றும் கப்பல் சேவை இருக்கிறது. விமானம் அல்லது கப்பல் டிக்கெட் புக் செய்யும் தளங்களில் சென்று நீங்கள் இதை புக் செய்து கொள்ளலாம்.
பெர்மிட் அவசியம்: அது ஏன் வேறு எந்த ஊரில் இருந்தும் நேரடி விமானம் இல்லை என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதற்கு முக்கிய காரணமே லட்சத்தீவுக்குள் அனைவராலும் சென்றுவிட முடியாது. லட்சத்தீவுக்கு செல்ல பெர்மிட் அவசியம்.. இதை நீங்கள் கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தின் அலுவலகத்தில் பெறலாம். இதற்கு நீங்கள் முதலில் அனுமதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து, அதை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்து க்ளியரன்ஸ் பெற வேண்டும். அதில் அடையாள ஆவணங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் இணைக்க வேண்டும்.
க்ளியரன்ஸ் பெற்ற பிறகு, நீங்கள் என்டரி பெர்மிட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அல்லது கொச்சியில் வில்லிங்டன் தீவில் அமைந்துள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். லட்சத்தீவை அடைந்ததும், இந்த என்டரி பெர்மிட்டை லட்சத்தீவில் உள்ள அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறிய ரக விமானம்: விமானம் மூலம் நீங்கள் செல்வதாக இருந்தால் ஆடைகளைக் குறைவாக பேக் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் லட்சத்தீவுக்கு வழக்கமான விமானங்கள் இயக்கப்படாது.. மாறாகச் சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்படும். எனவே, குறைவாகவே லக்கேஜ்களை பேக் செய்து கொள்ளுங்கள். அதேநேரம் கப்பல் என்றால் உங்களுக்குப் பிரச்சினை இல்லை.
எம்.வி. கவரட்டி, எம்.வி.மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி. லட்சத்தீவு கடல், எம்.வி. அரபிக் கடல் என ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன. அதில் எதாவது ஒன்றின் மூலம் நீங்கள் லட்சத்தீவுக்கு செல்லலாம்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications