உங்க அப்பா-அம்மா கல்யாணத்தப்போ 63 ரூபாய்தான் தங்கம் விலை.. இப்போ 1 லட்சம்! எப்போ கூடியது? ரீவைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இப்போது வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை முதல் முறையாக ரூ. 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மும்பை சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

இன்று ரூ. 1 லட்சத்தை தாண்டிய தங்கம், ஒரு காலத்தில் மிக மிக குறைந்த விலையில் கிடைத்தது. 1964-ம் ஆண்டு 10 கிராம் தங்கம் விலை வெறும் ரூ. 63 மட்டுமே!

gold gold price

சுதந்திரம் கிடைத்தபோது தங்கம் விலை

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த 1947-ம் ஆண்டு, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 88.62 ஆக இருந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. . 1964-ம் ஆண்டு 10 கிராம் தங்கம் விலை வெறும் ரூ. 63 என்ற அளவில் குறைந்து இருந்தது. அதாவது உங்களில் பலரின் பெற்றோர் திருமணம் செய்தபோது 10 கிராம் 63 ரூபாய்தான்.

கடந்த 5 ஆண்டுகளில் பெரிய உயர்வு

கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் தங்கம் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2020-ல் 10 கிராம் தங்கம் விலை சுமார் ரூ. 50,151 ஆக இருந்தது. இது இப்போது 2025 ஏப்ரலில் ரூ. 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இடையில், 2023 மார்ச்சில் ரூ. 60,000-ஐ தாண்டியது, 2024 ஏப்ரலில் ரூ. 70,000-ஐ தாண்டியது. இந்த 2025 ஆண்டில் மட்டும் இதுவரை தங்கம் 32 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

விலை உயர முக்கிய காரணங்கள்:

  • உலகப் பிரச்சனைகள்: நாடுகள் இடையே ஏற்படும் பிரச்சனைகள் (போர் பதட்டங்கள்) காரணமாக மக்கள் பாதுகாப்பிற்காக தங்கத்தை வாங்குகிறார்கள்.
  • அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது: அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும்போது, தங்கம் மற்றவர்களுக்கு மலிவாகத் தெரிகிறது. இதனால் வாங்குவது அதிகமாகிறது.
  • பங்குச் சந்தை குழப்பம்: பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை இருக்கும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தை நாடுகிறார்கள்.
  • மத்திய வங்கிகள் வாங்குதல்: இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற பல நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. இதுவும் தேவையை அதிகரிக்கிறது.
  • வர்த்தகப் போர்கள்: அமெரிக்கா - சீனா போன்ற நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பிரச்சனைகளும் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, தங்க விலையை பாதிக்கின்றன.

எந்த நேரத்திலும் பிரச்சனை ஏற்படும் என்ற சூழ்நிலை வரும்போது, பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் அதன் விலை உயர்கிறது என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

year 10 gram 24k gold rate year 10 gram 24k gold rate
1964 63.25 1995 4680
1965 71.75 1996 5160
1966 83.75 1997 4725
1967 102.50 1998 4045
1968 162 1999 4234
1969 176 2000 4400
1970 184 2001 4300
1971 193 2002 4990
1972 202 2003 5600
1973 278.50 2004 5850
1974 506 2005 7000
1975 540 2007 10800
1976 432 2008 12500
1977 486 2009 14500
1978 685 2010 18500
1979 937 2011 26400
1980 1330 2012 31050
1981 1670 2013 29600
1982 1645 2014 28006.50
1983 1800 2015 26343.50
1984 1970 2016 28623.50
1985 2130 2017 29667.50
1986 2140 2018 31438
1987 2570 2019 35220
1988 3130 2020 48651
1989 3140 2021

48720

1990 3200 2022 52670
1991 3466 2023 65300
1992 4334 2024 77913
1993 4140 2025 100000
1994 4598
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+