“ஷாக்” - சமந்தா முதல் அனுஷ்கா வரை.. இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சோகங்களா? அடுத்தடுத்து நோய் பாதிப்பு
சமந்தா தொடங்கி அனுஷ்கா வரை அண்மையில் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
சென்னை: நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகை அனுஷ்காவும் சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருக்கிறார். இதேபோல் அண்மையில் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு என்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் குறிப்பாக தமிழ்நாடு ரசிகர்கள் நடிகர், நடிகைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைபோல் கருதுவார்கள்.
அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகருக்கோ நடிகைக்கு உடல் ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை போன்று பாவித்து அவர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இப்படி சமீபத்தில் அறிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட நடிகைகளை பற்றி பார்ப்போம்.

1. சமந்தா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக தெரிவித்தார். தசை அழற்சி எனப்படும் இந்த நோய் பாதித்தால், தசையில் உள்ள செல்களை தாக்கி மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கும்.

உயிருக்கே ஆபத்தான மயோசிடிஸ்
ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மயோசிடிஸ் பாதிப்பால் தசை பலவீனமாகி சாப்பிடும்போது சுவாசக் குழாய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் ஆஸ்பிரேசன் நிமோனியா ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. வெகு சிலருக்கு இதனால் புற்று நோயும் ஏற்படலாம். மேலும் ரத்த குழாயில் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், இதற்கு சிகிச்சை செய்ய முடியும்.

2. மம்தா மோகன்தாஸ்
மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் ஆட்டோ இம்யூன் எனப்படும் லிட்டிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த நோயால் தனது நிறத்தை இழந்து வருவதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கை, கால், உதடு, முடி என அனைத்து பாகங்களும் நிறத்தை இழந்து திட்டு திட்டாக காட்சியளிக்கும். இதற்கு சிகிச்சையே இல்லை என்பதுதான் சோகம்.

3. நடிகை பூனம் கவுர்
நெஞ்சிருக்கும் வரை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை பூனம் கவுர், ஃபைப்ரோமியால்ஜியா என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தகவல் வெளியானது. தூக்கம், ஞாபக மறதி, சோர்வு, தசை வலி ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த நோயால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருக்கும் அவர், கேரளாவில் இதற்கென தனி சிகிச்சை பெற்று உள்ளார்.

4. ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தார். ஹார்மோன் தொடர்பான நோயான பிசிஓஎஸ் பாதிப்பால் கருவுறாமை, மாதவிடாய் சிக்கல், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் இதை சமாளிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

5. அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அனுஷ்கா சூடோபுல்பார் என்ற வினோத நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறார். 20 நிமிடங்கள் இடைவிடாமல் சிரிக்கும் இந்த நோயால் படப்பிடிப்புகளில் நகைச்சுவை காட்சிகளின்போது தரையில் விழுந்து சிரித்ததாக கூறி உள்ளார். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் வரும் அலர்ஜி மற்றும் வீக்கத்தால் ஏற்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நூற்றில் ஒருவருக்கு நினைவாற்றல் இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications