நெருங்கிய கெடு.. ‛கேஷ் ஆன் டெலிவரி’க்கு இனி ரூ.2000 நோட்டு வாங்கமாட்டோம்! அமேசான் அறிவிப்பு! ஏன்?
சென்னை: அமேசான் நிறுவனத்தில் கேஷ் ஆன் டெலிவரியில் பொருட்கள் வாங்குவோரிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகளை இனி வாங்கமாட்டோம் என குறிப்பிட்ட தேதியை சொல்லி அந்த நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2016 நவம்பர் மாதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு புழக்கத்தில் விடப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றலாம் என செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது.
இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் வழங்கி மாற்றி வருகின்றனர். அதோடு பலரும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கடைகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும்போது வழங்கி மாற்றி கொள்கின்றனர்.
இந்நிலையில் தான் அமேசான் நிறுவனம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‛‛வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகளை அமேசான் நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரி முறையில் வாங்கி கொள்ளாது'' என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ‛‛மூன்றாவவது தரப்பு கூரியர் நிறுவனம் மூலம் அமேசான் பொருட்களை வாங்கினால் ஏற்றுக்கொள்ளப்படலாம்'' எனவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து அதனை திரும்ப பெற்று வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி நிலவரப்படி 93 சதவீதத்துக்கும் அதிகமான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இன்னும் 7 சதவீத அளவிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப வர வேண்டி இருப்பதாக கூறியது.

மேலும் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளின் மதிப்பு என்பது ரூ.3.32 லட்சம் கோடியாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. அதோடு வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ள நோட்டுகளில் 87 சதவீதம் வரை டெபாசிட்டாகவும், 13 சதவீத நோட்டுகள் ரூ.2000க்கு நிகரான பிற நோட்டுகளை வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் அமேசான் நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரி முறையில் செப்டம்பர் மாதம் 19ம் தேதியில் இருந்து ரூ.2000 நோட்டுகளை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. இதனால் அமேசானில் பொருட்கள் வாங்குவோர் விழிப்போடு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications