சூர்யா முதல் தனுஷ் வரை.. ஏஆர் ரஹ்மான் டூ நயன்தாரா வரை.. உதயநிதி வழங்கிய திரைப்பட விருதுகள்
சென்னை: 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022ம் ஆண்டுகளுக்கான சின்னதிரை விருதுகளை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் சிறந்த நடிகர், நடிகைககளாக தேர்வு செய்யப்பட்ட பார்த்திபன், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்பட பலருக்கும் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
சின்னத்துரைக்கும் விருது
அதேபோல் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் , சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
மேலும் 2015 -2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா - தனுஷ்
அதன்படி 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான வெளியான திரைப்படங்களில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜோதிகா - சாய் பல்லவி
அதேபோல் சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி, ஆன்ட்ரியா, ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம் கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
லோகேஷ் கனகராஜ்
மேலும் 2017 ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருது மாநகரம் படத்துக்கான லோகேஷ் கனகராஜ், சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது தரமணி படத்துக்காக இயக்குநர் ராம், சிறந்த கதாசிரியர் விருது தீரன் அதிகாரம் 1க்கு இயக்குநர் எச் வினோத், 2018 ம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை வடசென்னை படத்துக்கு சமுத்திரக்கனி, சிறந்த இயக்குநர் விருது பரியேறும் பெருமாள் படத்துக்கு மாரிசெல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏஆர் ரஹ்மான்
மேலும் 2017 ம்ஆண்டுக்கான வடசென்னை படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது அமீருக்கும், சிறந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது மோகினி திரைப்படத்துக்காக யோகி பாபுவும் தேர்வு செய்யப்பட்டனர். 2022 சிறந்த இசையமைப்பாளர் விருது பெனான்னியின் செல்வன் திரைப்படத்துக்காக ஏஆர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
சின்னத்திரை விருது பிரபலங்கள்
சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத் திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானாஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருது வழங்கிய உதயநிதி
இதையடுத்து விருது வழங்கும் விழா இன்று நடந்தது. சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடந்த விழாவில் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சுவாமிநாதன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சமும் வழங்கப்பட்டது.
அதேபோல் சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications