இன்ஜினியரிங் கவுன்சலிங்... வீட்டில் இருந்தபடியும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: B.E., /B.Tech., கவுன்சலிங் ஆன்லைன் விண்ணப்ப பதிவை tneaonline.in என்ற இணையதளத்தில் இன்று முதல் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகம், உயர்கல்வித்துறை இடையேயான கருத்து முரண்பாட்டால், இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்துகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங்குக்கு வீட்டில் இருந்தபடியும், 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்களிலும் இணையதளத்தில் (www.tndte.gov.in, www.tneaonline.in) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிப்பதற்காகவும், சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுன்சலிங்குக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் இன்று (மே 2ம் தேதி) தொடங்கி மே 31ம் தேதி முடிகிறது.
தொடர்ந்து, ஜூன் 3ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். ஜூன் 6ம் முதல் 11ம் தேதி வரை சான்று சரிபார்க்கும் பணி நடக்கும். ஜூன் 17ம் தேதி கவுன்சலிங்கில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் (ரேங்க் பட்டியல்) வெளியிடப்படும். ஜூன் 20ம் தேதி சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு தொடங்கும்.
பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஆன்லைனில் பொதுப்பிரிவு கவுன்சலிங் நடைபெறும். ஜூலை 30ம் தேதிக்குள் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications