27 மாவட்டங்களில் தேனீர் கடைகள், இனிப்பு கார வகை கடைகள் திறக்க அனுமதி.. தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழகத்தில் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் தேனீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தேனீர் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் தேனீர் கடைகளை திறக்கலாம். மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பார்சல் பெற மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. நெகிழிப்பைகளில் பார்சல் பெறுவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வெறும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. கடைகளில் நின்றோ அருகேவோ யாரும் தேனீர் குடிக்கக் கூடாது. இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளும் மேற்கண்ட 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
அது போல் அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள், சேவைகளை பெற இ சேவை மையங்கள் திறக்கவும் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பொருட்களுக்கு பணம் வழங்க ஏதுவாக கட்டுமான நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் வெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications