டிடிவி தினகரனை பக்கத்தில் வைத்து.. எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை! இதை யாரும் எதிர்பார்க்கலையே
சென்னை: என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது விவாதமாக எழுந்துள்ள நிலையில், இந்த இணைப்பு குறித்து டிடிவி தினகரனை பக்கத்தில் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம் கவனம் பெற்றிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்று கடுமையாக விமர்சித்திருந்தவர்தான் டிடிவி தினகரன். எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு பதில், தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று கூட பேசியிருந்தார். இருப்பினும் தற்போது எடப்பாடி தலைமையிலான என்டிஏ கூட்டணியில் டிடிவி இணைந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?
இன்று பிரதமர் மோடி பங்கேற்ற என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு கூட்டணி தலைவர்கள், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்திருந்தனர். அதில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது திமுக தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து செய்தியார்கள் டிடிவி தினகரனின் இணைவு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது,
"அதையெல்லாம் விட்டுவிட்டோம்"
"அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதால் என்டிஏ கூட்டணி பலம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமையான கூட்டணி எங்களுடையதுதான். நானும்-டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆனால், நாங்கள் ஒன்றாக எப்போது இணைந்தமோ.. அப்போதே அனைத்தையும் விட்டுவிட்டோம்" என பேசியிருந்தார் என்று பேசியுள்ளார்.
அண்ணன் தம்பிகளாக..
இதனையடுத்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "இது எங்கள் குடும்ப பிரச்சனை. ஒரு தாய் மக்களாக பிரச்சனை. எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. ஆனால், அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும் நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்" என்று கூறியிருந்தார்.
கழன்றுக் கொண்ட நிர்வாகிகள்
ஆனால் இந்த கூட்டணி, டிடிவி தினகரனின் வாக்கு வங்கியை தான் பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். காரணம் என்னவெனில், கடந்த 2021ல் டிடிவி தினகரன் என்டிஏ உடன் கூட்டணியில் இல்லை. அமமுக தேமுதிகவுடன் தனித்து களமிறங்கியிருந்தது. இப்படி எடப்பாடிக்கு எதிராக டிடிவி வாக்கு வங்கியை கிரியேட் செய்திருந்தார். இது சாதி ரீதியான ஓட்டு பேங்க். 2021ல் அதிமுக சில இடங்களில் தோற்றதற்கு காரணம் இதுதான். இப்படி இருக்கையில் திடீரென டிடிவி என்டிஎ-வில் இணைந்திருப்பது அமமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பலம் இழக்கும் டிடிவி
எனவே அமமுக மாவட்ட செயலாளர்கள் 3 பேர், அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்த செயல், தினகரன் கட்சி நிர்வாகிகளை கேட்டுதான் முடிவெடுத்தாரா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. கட்சிக்குள்ளேயே இப்படி எனில், கட்சியின் வாக்காளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று கேள்வி எழுந்திருக்கிறது. இது எப்படி பார்த்தாலும் டிடிவிக்குதான் இழப்பு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications