Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷா வான்ஸ் முதல் கமலா ஹாரிஸ் வரை! சர்வதேச 6 இந்திய வம்சாவளி பெண்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியப் பெண்களுக்குப் பிறந்த நாட்டிலேயே உரிய முக்கியத்துவம் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால், சர்வதேச அரசியல் களத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக உருவெடுத்துள்ளனர். இவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன?

தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆளவேண்டும் என்று சீமான் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பேசி வருகிறார். அண்டை மாநிலமான ஒடிசாவில் ஒரு தமிழர் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தேசிய கட்சியான பாஜக அங்கே பிரிவினைவாதம் பேசி, அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தியா சர்வதேச அளவில் முன்னேறி வருகிறது என்று சொல்லிக் கொண்டே, உள்நாட்டில் உள்ள மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது.

Usha Vance Kamala Harris

இப்படியான காலகட்டத்தில் தான் சர்வதேச அரசியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் பெரும் புள்ளிகளாக வலம் வர ஆரம்பித்துள்ளனர். சில ஆண்டுகள் முன்னால் அந்தப் பட்டியலில் கமலா ஹாரிஸ் உச்சத்திலிருந்தார். இப்போது அவரைத் தொடர்ந்து . உஷா வான்ஸ் புதியதாக இணைந்துள்ளார். சர்வதேச அரசியல் களத்தில் கலக்கி வரும் 6 பெண்கள் யார்? அவர்களின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?

அமெரிக்க மக்கள் தங்களின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தயாராகி வருகின்றனர். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் அந்நாட்டில் நடைபெற உள்ளது. கடந்த 2020இல் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் படுதோல்வியைச் சந்தித்தார். அதற்குக் காரணம், டிரம்ப் குடியேற்றத்திற்கு எதிரான அரசியலை முன்வைத்தார். ஆகவே, டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் வேறு நாட்டவரின் குடியுரிமை பறிபோகலாம் என்ற அச்சத்தால் அவரை ஆதரிக்கப் பலரும் அஞ்சினர்.

Usha Vance Kamala Harris

ஆகவே, கடந்த முறை இழந்த நாற்காலியை எப்படியாவது மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று டிரம்ப் இந்தமுறை பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது குடியரசுக் கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக ஓஹியோ செனட்டர் ஜே.டி.வான்ஸை தேர்வு செய்து அறிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்தது என்னவோ வான்ஸ் பெயரைத்தான். ஆனால் ஒரே இரவில் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் புகழ் வெளிச்சம் பெற்றுள்ளார். இவர் ஒரு இந்திய வம்சாவளி பெண்.

நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2013 இல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஒரு இந்திய அமெரிக்க உறுப்பினர் இருந்தார். 2023 ஆம் ஆண்டு வரை அமெரிக்க மாநில சட்டமன்றத்தில் குறைந்தபட்சம் 50 இந்திய வம்சாவளி பிரதிநிதிகள் உள்ளனர். அதில் முக்கிய முகமாக உள்ள 6 இந்திய வம்சாவளி பெண்கள் பற்றி பட்டியல் போட்டுள்ளோம்.

உஷா சிலுக்குரி வான்ஸ்: இவரது பெற்றோர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இவரது குடும்பம் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டது. யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்து பட்டம் பெற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவம் படித்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எழுத்தராக பணியாற்றியவர். கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதியில் வளர்ந்த உஷா கல்வியின் மூலம் பெரும் உழைப்பைச் செலுத்தி உயரத்தை அடைந்துள்ளார்.

Usha Vance Kamala Harris

2014 இல் கென்டக்கி நகரத்தில் இவருக்கும் வான்ஸ்க்கும் திருமணம் நடைபெற்றது. அது ஒரு காதல் கல்யாணம் என்பது கூடுதல் செய்தி. இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் உள்ளன.அவரது கணவரின் அரசியல் வெற்றிக்குப் பிறகு இப்போது இவரது தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் புதியதாகத் தோன்றியுள்ளது.

கமலா ஹாரிஸ்: கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ஜோ பைடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்றார். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். கறுப்பின மற்றும் தெற்காசியப் பெண்கூட இவர்தான். இவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராகவும், கலிபோர்னியா மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இவர் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற போது தமிழ்நாட்டில் தஞ்சைப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் விழாக்கோலம் கொண்டிருந்தது.

ஷிவானி ராஜா: 29 வயதான ஷிவானி ராஜா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் லெய்செஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் வெற்றி பெற்ற முதல் டோரி எம்பி என்று வரலாறு படைத்தார். கடந்த 37 ஆண்டுகளில் நிகழ்த்தப்படாத சாதனை அது. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகவத்கீதையை முன்வைத்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

Usha Vance Kamala Harris

இவரது பெற்றோர் குஜராத் மற்றும் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர்கள். டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் Pharmaceutical and Cosmetic Science படித்து பட்டம் பெற்றவர். லேபர் கட்சியின் சார்பில் லண்டன் முன்னாள் துணை மேயராக இருந்த ராஜேஷ் அகர்வாலை தோற்கடித்து, 14,526 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நிக்கி ஹேலி: நிம்ரதா கவுர் ரந்தாவா என்பது இவரது நீளமான பெயர். அதைச் சுருக்கி நிக்கி ஹேலி என்று அழைக்கப்படுகிறார். இவர் பஞ்சாபிலிருந்து குடியேறிய இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர். அவர் க்ளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பட்டம் பெற்றார். குடியரசுக் கட்சியின் சார்பில் கீழ் தென் கரோலினாவின் ஆளுநராகப் பதவி வகித்த இவர், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி என மதிக்கப்படுகிறார்.

அவர் 2018இல் ராஜினாமா செய்வதற்கு முன்பு ஐ.நாவுக்கான டிரம்ப் அரசின் அமெரிக்கத் தூதராக இருந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு தனது வழிகாட்டி டிரம்ப்க்கு எதிராகச் சவால்விடத் தொடங்கினார். இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்பை தோற்கடிக்கத் திட்டம் தீட்டி வந்த இவர், துரதிர்ஷ்டவசமான போட்டியிடும் முடிவை மாற்றிக் கொண்டார். டிரம்ப்க்காக விட்டுக்கொடுத்து விலகிக் கொண்டார்.

பிரியங்கா ராதாகிருஷ்ணன்: நியூசிலாந்தின் முதல், இந்திய வம்சாவளி அமைச்சரான இவர் கேரள மாநிலம் வட பரவூரில் பூர்வீகமாகக் கொண்டவர். பள்ளிப் படிப்பைச் சிங்கப்பூரில் முடித்தார். மேற்படிப்புக்காக நியூசிலாந்திற்கு சென்றார். 2006 இல், நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். 2020 முதல் 2023 வரை ஆர்டெர்னின் பிரதிநிதியாக வேட்புமனு தாக்கல் செய்ததன் மூலம் சமூகம் மற்றும் தன்னார்வத் துறைக்கான அமைச்சராக இருந்தார். தற்போது இவர் மவுங்காகீகி தொகுதியின் எம்.பி.யாக பணியாற்றுகிறார்.

அனிதா ஆனந்த்: தமிழ்நாட்டையும் பஞ்சாபைச்சேர்ந்த இந்தியத் தம்பதிக்குப் பிறந்தவர் அனிதா ஆனந்த். இவர் கனேடிய வழக்கறிஞர், அரசியல்வாதி. இவர் ட்ரூடோவின் பரிந்துரையின்படி 2023 முதல் கனடிய கருவூல வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். அரசியல்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர். சட்டத்தில் முதுகலைப் பட்டம் என 4 பட்டங்களைப் பெற்றுள்ளார். யேல், குயின்ஸ் பல்கலைக்கழகம், மேற்கத்தியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியுள்ளார். முன்னதாக 2021 இல், தேசியப் பாதுகாப்பு அமைச்சராக ரைடோ ஹாலில் பதவியேற்றார் அனிதா. கனேடிய வரலாற்றில் இந்தப் பதவிக்கு வந்த இரண்டாவது பெண் இவர். கூடவே ஒரே இந்திய வம்சாவளி பெண் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+