ஜீரோ To ஹீரோ.. மொத்தமாக 353 எம்பிகள், 1655 எம்எல்ஏக்கள்! அசுர பலத்துடன் பாஜக.. காங்கிரஸ் நிலை என்ன?
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக - ஜேடியூ தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக மட்டும் தனிப்பெரும் கட்சியாக 89 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1654 ஆக அதிகரித்து இருக்கிறது. இது பாஜக வரலாற்றில் இல்லாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தி காலத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்த பாஜக 1990க்கு பிறகு உலகிலேயே மிக அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கட்சியாக உருவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரும் அடியாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் வெறும் 240 தொகுதிகளில் வென்று மைனாரிட்டி கட்சி என விமர்சிக்கப்பட்ட பாஜக, அதற்குப் பிறகான சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து பெருவெற்றி பெற்று வருகிறது.
950கால கட்டங்களில் ஜன சங்கமாகவும், 1977-ல் ஜனதா கட்சியுடன் இணைந்து 1980ல் பாஜகவாக மாறியது. மிகப்பெரிய மக்கள் இயக்கமான காங்கிரசை எதிர்த்து களமிறங்கினாலும், அந்த காலகட்டத்தில் ஒரு சில எம்பி, எம்எல்ஏக்களை பெறவே சிரமப்பட்ட கட்சிதான் பாஜக.

பீகார் தேர்தல்
"இன்று நாடாளுமன்றத்தில் நாங்கள் இரண்டு பேர் இங்கே இருக்கிறோம்.. இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் தான் அதிகமாக இருப்போம்" என பேசி இருந்தார் முன்னாள் பிரதமர் ஆன வாஜ்பாய். உண்மையில் அதனை மெய்யாக்கும் வகையிலேயே பாஜக அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. 1990 கால கட்டங்களுக்கு பிறகு இந்திய அளவில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமானது என்று தான் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாக இருக்கிறது.
பாஜக வளர்ச்சி
மேலும் உலக அளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி எனவும் பாஜகவினர் சொல்லிக் கொள்கின்றனர். தற்போதைய சூழலில் பாஜகவுக்கு மக்களவையில் 240 எம்பிகளும் ராஜ்யசபாவில் 103 எம்பிக்கள் உள்ளன. இது மொத்தம் 343 எம்பிகள். ஒரு காலத்தில் ஒட்டுமொத்தமாக நாட்டை கட்டுக்குள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு 126 எம்பிக்கள் மட்டுமே மொத்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக எம்எல்ஏ
அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் தொடங்கி தமிழ்நாடு வரை இந்தியா முழுவதும் பாஜகவுக்கு 1654 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல் மூலம் இந்த அபார சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் 1035 ஆக இருந்த பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2015ல் 997க சரிந்தது. அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 வரை பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 2023ல் 1441 ஆகவும், 2024ல் 1588ஆக இருந்த பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2025-ல் 1654 ஆக உள்ளது.
என்டிஏ வெற்றி
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு 258 எம்எல்ஏக்களும், மத்திய பிரதேசத்தில் 165 எம்எல்ஏக்களும், குஜராத்தில் 162 எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள். யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் 29, டெல்லியில் 48, புதுச்சேரியில் 9 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். சத்தீஸ்கர், அஸ்ஸாம், கோவா, ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, திரிபுரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஆளும் கட்சியாகவும், பீகார், ஆந்திரா, புதுச்சேரியில் பாஜக கூட்டணியும் ஆட்சியில் இருக்கிறது.
காங்கிரஸ்
இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இதில் பாதி கூட எம்எல்ஏக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு நாடு முழுவதும் 640 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மேலும் 240 மக்களவை உறுப்பினர்கள், 1654 எம்எல்ஏக்கள், 170 சட்ட மேலவை உறுப்பினர்கள், 103 ராஜ்யசபா எம்பிக்கள். இது மட்டுமில்லாமல் மேயர்கள், கவுன்சிலர்கள் என உலக அளவில் அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஜனநாயக நாட்டின் கட்சி என்ற பெருமையும் பாஜக பெற்றுள்ளதாக சொல்கின்றனர் அந்த கட்சியினர்.












Click it and Unblock the Notifications