சூர்யவம்சம் சரத்குமார் இவர் தான்.. காவலாளியாக இருந்து ZOHO சாப்ட்வேர் இன்ஜினியராக மாறிய இளைஞர்! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மெட்டா, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மாற்றாக தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜோஹோ ஐடி நிறுவனம் செயலி, சாப்ட்வேர்களை உருவாக்கி பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தான் வெறும் 1000 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறி ஜோஹோ நிறுவனத்தில் காவலாளியாக பணிக்கு சேர்ந்து இப்போது சாப்ட்வேர் இன்ஜினியராக பணி செய்து வரும் இளைஞரின் பின்னணி குறித்த ‛இன்ஸ்பிரேஷன்' தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்த ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்புக்கு மாற்றாக ‛அரட்டை' செயலி, கூகுள் வொர்க்ஸ்பேஸ் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 ஆகியவற்றுக்கு பதில் புதிய சாப்ட்வேர்களை ஜோஹோ நிறுவனம் வழங்கி வருகிறது.

from-zoho-security-guard-to-techie-assam-abdul-alim-story-went-viral-afte-a-senior-employee-spotted

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு நடுவே பிரதமர் மோடி இந்திய தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். இதனால் மத்திய அமைச்சரகள், தொழிலதிபர்கள் பலரும் தற்போது ஜோஹோ நிறுவனத்தின் செயலி மற்றும் சாப்ட்வேரை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் அனைவருக்கும் ‛இன்ஸ்பிரேஷன்' தரும் வகையில் ஜோஹோ நிறுவனத்தில் நடந்த ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தமிழகம் உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த இளம்வயதினர் பலருமு் இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் முயன்று வருகின்றனர். இப்படியான சூழலில் தான் அசாமை சேர்ந்த ஒருவர் வெறும் 1000 ரூபாயுடன் வீட்டை விட்டு வந்து ஜோஹோ நிறுவனத்தில் காவலாளியாக பணிக்கு சேர்ந்து தற்போது அவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:

அசாமை சேர்ந்தவர் அப்துல் அலிம். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 2013ம் ஆண்டில் ரூ.1000 பணத்துடன் அசாமில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரயிலில் வந்தார். ரயில் டிக்கெட்டுக்கு ரூ.800 செலவானது. கையில் ரூ.200 மட்டும் வைத்திருந்தார். சென்னையில் பல இடங்களில் வேலை தேடினார். 2 மாதங்கள் ஆனாலும் சரியான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையை செய்து வந்தார்.

இறுதியாக அவருக்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது. சென்னை ஜோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆனார். அப்போது அங்கு ஷிபு அலெக்ஸிஸ் என்ற சீனியர் ஊழியர் அப்துல் அலிமை பார்த்தார். அப்போது அவர் என்ன படித்துள்ளாய். கம்ப்யூட்டர் அறிவு இருக்கிறதா? என்பதை கேட்டுள்ளார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறினார். அதேவேளையில் பள்ளி காலத்தில் எச்டிஎம்எல் கொஞ்சம் படித்துள்ளதை அறிந்து கொண்டார். அதன்பிறகு ஷிபு அலெக்ஸிஸ் தனிப்பட்ட முறையில் அப்துல் அலிமிற்கு பயிற்சி கொடுத்தார்.

12 மணிநேர செக்யூரிட்டி வேலைக்கு பிறகு கிடைக்கும் நேரத்தில் அப்துல் அலிம் அதனை கற்றுக்கொண்டார். இறுதியாக 8 மாதங்கள் கழித்து சிறிய செயலியை அப்துல் அலிம் உருவாக்கினார். அப்போது அதனை ஷிபு அலெக்ஸில் தனது மேனேஜரிடம் காண்பித்தார். அந்த செயலி அவருக்கு பிடித்துப்போனது. இதையடுத்து அவருக்கு இண்டர்வியூ வைத்து பணியில் சேர்த்து கொண்டார். இப்போது அப்துல் அலிம் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இதுதொடர்பான பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது பலரும் தங்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பது இல்லை என்ற வருத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் முழு மனதோடு முயற்சி செய்யும்பட்சத்தில் நல்ல வேலை கிடைக்கும். இதற்கு உதாரணமாக அப்துல் சலிம் மாறி உள்ளார். அப்துல் சலிம் பற்றிய இந்த பதிவுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் - தேவயானி நடித்த சூர்யவம்சம் திரைப்படம் பலருக்கும் இன்று வரை ‛இன்ஸ்பிரேஷன்' கொடுக்கும் படமாக உள்ளது. சரத்குமார் படிக்காமல் கிடைத்த வேலையை செய்து வருவார். தேவயானியை காதல் திருமணம் செய்து பழைய பஸ் வாங்கி பெரும் பணக்காரராக முன்னேறுவார். அந்த திரைப்படத்தை போல் தேவயானிக்கு பதில் தேவயானிக்கு பதில் சீனியர் ஊழயிர் ஷிபு அலெக்ஸில் வழிகாட்ட காவலாளியாக இருந்த அப்துல் சலிம் ஜோஹோவில் சேர்ந்து க 10 ஆண்டுகளை நிறைவு செய்து சாப்ட்வேர் இன்ஜினியராக தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+