பெட்ரோல், டீசல் விலையை 2வது முறையாக உயர்த்திய ஷெல்.. தனியார் நிறுவனங்கள் அடித்தடுத்து அறிவிப்பு..!!
சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி தனியார் ரீடைல் எரிபொருள் நிறுவனமான ஷெல், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.
இதனால் தனியார் நிறுவனமான நைரா ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருக்கும் வேளையில் தற்போது ஷெல் தனது எரிபொருள் விலையை 2வது முறையாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Shell India, ஏப்ரல் 1 முதல் தனது ரீடைல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூருவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி, சாதாரண வகை பெட்ரோல் 119.85 ரூபாயாகவும், Power என்ற பிரீமியம் வகை பெட்ரோல் 129.85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 117.8 ரூபாயாகவும், பவர் பெட்ரோல் 127.8 ரூபாயாகவும் உள்ளது.
டீசல் விலைகளில் இன்னும் பெரிய உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு லிட்டருக்கு 25.01 ரூபாய் உயர்ந்து, சாதாரண டீசல் வரை 123.52 ரூபாய்க்கும் மற்றும் பிரீமியம் வகை டீசல் 133.52 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஷெல் நிறுவனத்தில் டீசல் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வுகளில் ஒன்றாகும்.
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 124.6 ரூபாயாகவும், பிரீமியம் வகை டீசல் 134.66 ரூபாயாகவும் உள்ளது.
ஷெல் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு, சில பங்க்-களில் குறைந்த அளவிலான விலை உயர்வை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பெட்ரோல் விலை ரூ.2 - 2.50 வரை உயர்ந்து ரூ.108.50 ஆகவும், டீசல் ரூ.93.50 ஆகவும் அறிவித்தது. தற்போது ஒரு மாதத்தில் 2வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 7.41 ரூபாயும், டீசலுக்கு 25.01 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.
நைரா எனர்ஜி
ஷெல் நிறுவனத்தை போல் ரஷ்ய ராஸ்நெப்ட் முதலீட்டில் இயங்கும் நைரா எனர்ஜில நிறுவனம் மார்ச் 27 அன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் ரூ.3 விலைகளை உயர்த்தியது.
மகாராஷ்டிராவில் Nayara பங்குகளில் பெட்ரோல் ரூ.108.82 ஆகவும், டீசல் ரூ.93.09 ஆகவும் உயர்ந்துள்ளது. நைரா எனர்ஜி நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 7,000 எரிபொருள் நிலையங்களை இயக்குகிறது.
நைரா எனர்ஜி நிறுவனம், மத்திய கிழக்கு போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தடைகள் இந்த விலை உயர்விற்கு காரணம் என விளக்கம் கொடுத்தது.
மத்திய அரசு நடவடிக்கை
மத்திய அரசு மார்ச் 27ஆம் தேதியன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டு விலையேற்றத்தைத் தடுக்கவும், மக்களி மீது சுமையை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுத்தது. வரி குறைக்கப்பட்டாலும் இது ரீடைல் சந்தையில் விலை குறைப்பை ஏற்படுத்தாமல் சுத்திகரிப்பு நிலையங்களின் நிதி சுமையை குறைத்தது.
பெட்ரோலுக்கு முன்பு லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு முன் லிட்டருக்கு ரூ.10 ஆக இருந்த கலால் வரி தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது பூஜ்ஜியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி குறைப்பு மூலம்.












Click it and Unblock the Notifications