உக்ரைன்- ரஷ்யா போர்: கச்சா எண்ணெய் விலை கிடுகிடு! 121 வது நாளாக உயராக பெட்ரோல் டீசல் விலை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 121வது நாளாக எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் பங்கு சந்தைகள், எண்ணெய் வித்துகளின் விலை உயர்ந்தது. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலையில் இன்று வரை மாற்றமில்லாமல் உள்ளது.
Recommended Video
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 121வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைந்தது
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

வெற்றிகரமான 121வது நாள்
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 121வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
உக்ரைன்- ரஷ்யா போரால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 120 டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. தங்கம், வெள்ளி விலை உடனடியாக உயர்ந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications