பெட்ரோல் டீசல் விலை: வெற்றிகரமாக 126வது நாளாக மாற்றமில்லை - நிம்மதி பெருமூச்சில் வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலையில் 125வது நாளாக மாற்றமின்றி இன்று விற்பனையாகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 126வது நாளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயரவில்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. 126வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை லிட் 100 ரூபாய்

பெட்ரோல், டீசல் விலை லிட் 100 ரூபாய்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

வரி குறைப்பு

வரி குறைப்பு

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

தீபாவளி பரிசு

தீபாவளி பரிசு

இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

126வது நாளாக மாறாத பெட்ரோல் விலை

126வது நாளாக மாறாத பெட்ரோல் விலை

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 126வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் ரஷ்யா போர்


இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் ஏற்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலராக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

Recommended Video

    பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்… 5 மாநில தேர்தல், உக்ரைன் போர் எதிரொலி!
    விரைவில் விலை உயர வாய்ப்பு

    விரைவில் விலை உயர வாய்ப்பு

    தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் செய்யாமல் படிப்படியாக தினமும் 1 ரூபாய் என்றளவில் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+