பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம் என்ன? விலை குறையுமா?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சென்னை: பெட்ரோல், டீசல் தொடர்ந்து 90ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
கடந்த மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது.

அன்றைய தினம் முதல் பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 63 வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை 90 நாட்களாக உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்படுவது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் இப்போது 94 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்று இது 91 டாலர் வரையிலும் கூட சென்றது. கடந்த ஆறு மாதங்களில் இதுதான் குறைந்தபட்ச விலையாகும். இருப்பினும், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
இந்தியா ரூபாயின் மதிப்பும் வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.62க்கு சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது. உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications