பெட்ரோல், டீசல் இன்றைய நிலவரம்..சென்னையில் விலை குறையுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
பெட்ரோல், டீசல் தொடர்ந்து 55ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 55வது நாளாக மாற்றமின்றி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

கலால் வரி குறைப்பு
மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது.

55 நாட்களாக மாற்றமின்றி விற்பனை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 55 வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது.பெட்ரோல் டீசல் விலை உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் விலை குறைப்பு
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, பெட்ரோல் மீது வாட் வரி லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை கடந்த நவம்பர் 4 மற்றும் மே 22ம் தேதி குறைத்து. மாநிலங்களும் இதேபோன்று வரியைக் குறைக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தமிழகத்தில் விலை குறையுமா?
மத்திய அரசு விடுத்த கோரிக்கையை இதற்கு முன் ஆண்ட மகாவிகாஸ் அகாதி அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளனர். இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் இது போல பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications