பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 17வது நாளாக மாற்றமில்லை.. விலையை குறைக்க கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை 17வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த 17 வது நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெட்ரோல் ஒரு லிட்டர் 103 ரூபாய் வரை விற்பனையாகிறது. டீசல் விலையும் 100 ரூபாயை எட்டப்போவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை 17வது நாளாக எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 17 நாட்களாக விலை உயர்வு இல்லை என்பது சற்றே நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமான்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications