பெட்ரோல் செலவை குறைக்கனுமா? வண்டியில் இந்த தப்பை இனிமேல் பண்ணாதீங்க.. அவசியம் தெரிய வேண்டிய டிப்ஸ்
சென்னை: கார் வைத்து இருப்பவர்கள் பலருக்கும் எரிபொருள் செலவை நினைத்தால் காரை எடுக்கலாமா? வேனாமா என யோசிக்க தோன்றும். பெட்ரோல் விலை மேலும் உயரக்கூடும் என சமீப நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில், வாகன ஒட்டிகளுக்கு கிலியை ஏர்படுத்துவதாக இது உள்ளது.
ஆனாலும், கார்களில் அதிக மைலேஜ் கிடைக்க சில டிப்ஸ்கள் உள்ளன. இதை பின்பற்றினாலே உங்கள் வாகனத்திற்கு தேவையான எரிபொருள் செலவை குறைக்கலாம்.. இது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சடன் பிரெக், ஆக்ஸலிரேஷன்
* வாகன ஒட்டிகள் தாறுமாறாக வாகனத்தை இயக்காமல் சீராக இயக்கினாலே எரிபொருளை கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அதாவது, உடனடியாக ஆக்ஸலிரேஷன் கொடுப்பது.. தேவையில்லாத இடங்களில் சடன் பிரெக் அடிப்பது ஆகியவற்றால் எரிபொருள் அதிகம் செலவு ஆகும். வண்டியை ஸ்மூத் ஆக ஓட்டுவது மற்றும் சடன் பிரேக்கிங்கை தவிர்த்தாலே நெடுஞ்சாலைகளில் 30 சதவீதமும், நகர்புறங்களில் 5 சதவீதமும் எரிபொருள் செலவை குறைக்க முடியும்.
டயரை கண்காணிப்பது
டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், காற்று குறைவாக இருந்தால் சக்கரம் சுழல்வதற்கு அதிக திறன் தேவைப்படும். அதாவது, என்ஜின்கள் வேகமாக இயங்கி வாகனத்தை இயக்க வேண்டியிருக்கும். எனவே, காரோ, பைக்கோ அல்லது கனரக வாகனமோ.. பரிந்துரைக்கப்பட்ட அளவில் டயரின் ஏர் பிரஷர் வைத்து இருப்பது எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும். இதை சரியாக பாலோ செய்தாலே கிட்டத்தட்ட 3 சதவீதம் மிச்சமாகும். மாதத்திற்கு ஒருமுறையாவது ஏர் செக் செய்து கொள்ள வேண்டும்.
தேவையில்லாத லக்கேஜ்கள்
* கார்களாக இருந்தால் தேவையில்லாத லக்கேஜ்களை வண்டியில் போட்டு சுமக்க வேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு 25 கிலோ கூடினாலும், வாகனத்தின் எரிபொருள் செலவு 1 சதவீதம் வரை கூடும். இதனால் வண்டியின் பூட்டில் தேவையில்லாத லக்கேஜ்கள் கிடந்தால் அதை எடுத்து வீட்டில் பத்திரமாக வைப்பது நல்லது.
* காரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இருந்தால், காலால் அடிக்கடி வேகத்தை சிறுசிறு அளவில் மாற்றுவதற்குப் பதிலாக, ஒரே நிலையான வேகத்தில் செலுத்துவது மிகவும் எரிபொருள் மிச்சமாகும்.. சமமான நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் கண்ட்ரோல் பயன்படுத்துவது, தெரியாமலேயே வேகம் அதிகரிக்கும் நிலையை தடுக்கும். மேலும், எஞ்சின் அதிக செயல்திறன் கொண்ட RPM வரம்பில் இயங்க உதவும்.
சிக்னல்களில் நிற்கும்போது
* சிக்னல்களில் ஒரு நிமிடத்திற்கு மேல் நிற்க வேண்டியிருந்தால் என்ஜினை ஆஃப்செய்துவிட்டு காத்திருக்கலாம். தற்போது சந்தையில் அறிமுகம் ஆகும் நவீன கார்களில் என்ஜின்களை மீண்டும் ஸ்டார்ட் செய்ய குறைவான எரிபொருளே தேவைப்படும். காரில் ஸ்டாப்/ஸ்டார்ட் தொழில்நுட்ப வசதி இருந்தால், அதை அணைக்க வேண்டம். ஏனெனில், அது எரிபொருள் சேமிப்பிற்காகவே வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.
* ஏர் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக் அவ்வப்போது செக் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த இரண்டிலும் பிரச்சினைகள் இருந்தால் மைலேஜ் குறையும். அழுக்கான ஏர் பில்டராக இருந்தால் அதை மாற்றிவிடுவது நல்லது. இதனால் 10 சதவீதம் வரை மைலேஜ் அதிகரிக்க முடியும். புதிய வாகனமாக இருந்தால் திறம்பட வண்டி இயங்க வழிவகுக்கும்.
கார் கண்ணாடிகளை மூடி வைத்தால்..
* ரூப்களில் சரக்குகள் வைப்பது, ஜன்னல்களை திறந்து வைப்பது ஆகியவை அதிவேகமாக செல்லும் போது காற்று எதிர்ப்பை உருவாக்குகின்றன. 65 கிலோ மீட்டருக்கு குறைவாக செல்லும் போது எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கு மேல் சென்றால் இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. எனவே, ஜன்னல்களை மூடி வைத்து காரை ஓட்டினால் ஏசிக்காக செலவு ஆகும் எரிபொருளை விட அதிகம் மிச்சம் பிடிக்கலாம்.
* தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த ஆயிலையே பயன்படுத்த வேண்டும். தவறான ஆயில் பயன்படுத்தினால் மைலேஜ் 1 - 2 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், தவறான பிசுப்புத்தன்மை கொண்ட எண்ணெயைப் பயன்படுத்தினால், உள் உராய்வு அதிகரிக்கும்.














Click it and Unblock the Notifications