தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விலை மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.

Full curfew in Tamil Nadu today; Do you know todays petrol and diesel prices in tamilnadu?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் தமிழகம், புதுவை, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலை சில காசுகள் குறையத்தான் செய்தது. தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வந்தன.

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் கடந்த சில நாட்களுக்காக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. நேற்று இருந்த அதே விலையே இன்றும் நீடிக்கிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+