வர முடியாது.. "யு டர்ன்" போட்ட தமிழக புள்ளி.. மோடியே கூப்பிட்டு பேசினாரே.. அப்போ எல்லாம் வேஸ்ட்டா?
சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் புள்ளி ஒருவரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று வந்ததாக பல தகவல்கள் வந்தன. ஆனால் அந்த முக்கிய புள்ளியோ பாஜகவின் கோரிக்கையை ஏற்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன் கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி சென்று இருந்தார். டெல்லியில் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தவர் நீண்ட நேரம் அவரிடம் ஆலசோனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன், தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

என்ன கோரிக்கை?
அதாவது தனி பொறுப்பு உள்ள இணை அமைச்சர் பதவி ஒன்றை வாசனுக்கு வழங்க பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பிரதமர் தரப்பு வைத்த கண்டிஷன், த.மா.காவை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணையுங்கள். தமிழ்நாட்டில் சேர்ந்து செயல்படுங்கள்..அமைச்சர் பதவி தருகிறோம் என்று கூறியதாக ஒன் இந்தியாவில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

ஆலோசனை
ஒன் இந்தியா சார்பாக கடந்த ஏப்ரல் 7ம் தேதி வெளியிட்ட செய்தியில் பாஜகவின் இந்த பிளான் குறித்து குறிப்பிட்டு இருந்தோம். அதேபோல் ஜி.கே வாசன் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் இது பற்றி ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவில் இணைக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள்? பாஜகவில் சேர்ந்தால் நமக்கு எதிர்காலம் இருக்குமா என்று வாசன் கேட்டதாக குறிப்பிட்டு இருந்தோம்.

நெகட்டிவ்
இந்த நிலையில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்கு நெகட்டிவ்வாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. பாஜகவில் இணைய வேண்டாம். மற்ற மாநிலங்களில் இருந்து பாஜகவில் இணைந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவில் இணைவது சரியாக இருக்காது. ஏற்கனவே அங்கு பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள்.. நீங்களும் போனால் உங்களுக்கு அங்கு மவுஸ் இருக்காது என்று நிர்வாகிகள் அட்வைஸ் சொன்னதாக கூறப்படுகிறது.

மவுஸ் இருக்காது
பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர்கிறது. கிட்டத்தட்ட எதிர்க்கட்சி போல செயல்படுகிறது. ஆனால் நீங்கள் பாஜகவிற்கு சென்றால் பெரிய அளவில் பலன் அளிக்காது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லை. இப்போது அவர்களுடன் சேர்வது பலன் அளிக்காது என்று நிர்வாகிகள் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜகவிற்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை ஜிகே வாசன் தரப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன?
அதோடு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்து விடலாமா என்றும் அவர் ஆலோசனை செய்து வருகிறாராம். நாடு முழுக்க காங்கிரசில் இருந்து பிரிந்த தலைவர்களை மீண்டும் இணைக்க தேசிய தலைமை முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜிகே வாசனுக்கும் டெல்லி தலைமை நூல் விட்டு வருகிறதாம். இதை ஏற்றுக்கொண்டு காங்கிரசில் ஐக்கியம் ஆகிவிடலாம். ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கலாம் என்று அவர் தரப்பு யோசனை செய்து வருவதாக தமாகாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications